»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை:

விநியோகஸ்தரிடம் ரூ 16 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா ஆகியோருக்கு எதிராக மதுரைபொருளாதார நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை தானப்பமுதலி தெருவைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர் சினிமா பட விநியோகஸ்தர். இவர் மதுரை தனிநீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு:

நான் மதுரையில் சினிமா பட விநியோகஸ்தராக இருக்கிறேன். சமீபத்தில் சென்னையில் இருந்து நடிகர் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா ஆகியோர் தொடர்புகொண்டு பேசினர். அவர்கள், வேட்டியை மடிச்சுக் கட்டு படத்தின் விநியோக உரிமையை என்னிடம் தருவதாகக் கூறினார்கள். நானும் ஒப்புக்கொண்டு ரூ27 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தேன்.

அந்தப் படம் வெளியான பிறகு அவர்கள் எனக்கு ரூ. 8 லட்சம் பாக்கியைத் தராமல் இருந்தார்கள். அதைக் கேட்ட போது இன்னொரு படம்எடுக்கவிருப்பதாகவும், அதன் விநியோக உரிமையை எனக்குத் தருவதாகவும் கூறினார்கள். ஆனால் அவர்கள் ஒரு படமும் எடுக்கவில்லை.

இதற்குப்பின் கணக்குப் பார்த்ததில் அவர்கள் எனக்கு ரூ 16 லட்சம் பாக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து பணத்தைத் திருப்பித்தருவதற்கான எந்த தகவலும் இல்லாததால் வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கும் அவர்களிடமிருந்து பதில் இல்லை.

பின்னர் சென்னைக்குச் சென்று நேரில் பேசினேன். அப்போது என்னிடம் 6 காசோலைகளை (செக்குகள்) கொடுத்தார்கள். அந்த செக்குகளில் ஒரு செக்கைவைத்து ரூ 1 லட்சம் மட்டுமே பணம் எடுக்க முடிந்தது. மீதி செக்குகள் திரும்பி வந்து விட்டன.

எனவே, நம்பிக்கை மோசடி செய்தது தொடர்பாகவும், பலமுறை கேட்டும் பணம் தராமல் ஏமாற்றியது தொடர்பாகவும் அவர்கள் மேல் வழக்குத்தொடர்ந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்த புகார் குறித்து மதுரை பொருளாதார குற்றவியல் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil