»   »  தெனம் தெனம் தியேட்டர் போய் படம் பாக்குறேன்..'ராஜா மந்திரி' இயக்குநரின் சந்தோஷப்பதிவு!

தெனம் தெனம் தியேட்டர் போய் படம் பாக்குறேன்..'ராஜா மந்திரி' இயக்குநரின் சந்தோஷப்பதிவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜா மந்திரி படத்தை ரசித்த அனைவருக்கும் இயக்குநர் உஷா கிருஷ்ணன் நன்றி தெரிவித்திருக்கிறார்.

கலையரசன், காளி வெங்கட் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ராஜா மந்திரி. உஷா கிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களிடம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் இயக்குநர் உஷா கிருஷ்ணன் தனது சந்தோஷத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் ''ராஜா மந்திரி ஹவுஸ்புல்.. செல்போன் அடிச்சிக்கிட்டே இருக்கு.. நன்றி.. ரொம்ப நன்றி.. சந்தோஷம்..இந்த வார்த்தைகளத் தேய தேய சொல்லியாச்சு..

Raja Manthiri Fame Usha Krishnan Shared her Feelings

படம் கண்டிப்பா வெற்றியடையும்னு தெரியும்.. எல்லாராலயும் கனெக்ட் பண்ணிக்கிட்டு பாக்க முடியும்னு தெரியும்.. காமெடி நல்லா வொர்கவுட் ஆவும்னு தெரியும்.

ஆனா 4 வயசு குழந்தையிலேந்து, 60,70 வயசு தாத்தா பாட்டி வரைக்கும் பாராட்டுவாங்கனு நெனக்கல... சாதாரண மக்கள்லேந்து பிரபல பத்திரிக்கை வரைக்கும் தட்டிக்குடுப்பாங்கன்னு நெனக்கல.

சந்தோஷமா இருக்கு.. தெனம் தெனம் தியேட்டர்ல போய் ஒரு டிக்கட் எடுத்துக்கிட்டு உக்கார்ந்துக்குறேன்.. எல்லாரும் கைத்தட்டி.. விசிலடிச்சு.. விழுந்து விழுந்து சிரிக்கிறத பாக்க ஆசையா இருக்கு.. படம் முடிஞ்சு அவங்க பேசுறத ஒட்டுக்கேக்றது வேற லெவல் சந்தோஷம்..

ஒரு காதலன்: "தெரியாம உன் கூட வந்துட்டேன்.. இன்னொரு தடவ வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு வந்து பாக்கனும்.. ரொம்ப நாளாச்சு இப்டி ஒரு படம் வந்து.."

ரொம்ப நன்றி... என் கதையையும், கதாப்பாத்திரங்களையும் காதலிச்சதுக்கு...என்று தனது மகிழ்ச்சியைப் பதிவு செய்திருக்கிறார். உஷா கிருஷ்ணன் இயக்குநர் சுசீந்திரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Raja Manthiri Director Usha Krishnan has shared her Happiness.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil