சிறுவயதில் தவிக்கவிட்ட குடும்பம்.. மனஅழுத்தத்தால் துவண்ட சாந்தினி பிரகாஷின் கண்ணீர் கதை!
சென்னை: சின்னத்திரை ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை சாந்தினி பிரகாஷ். இவரை ரசிகர்கள் சின்னத்திரை சொர்ணாக்கா என்று அழைப்பார்கள். அந்த அளவிற்கு வில்லத்தனத்தை காட்டி ரசிகர்களிடம் பெயர் எடுத்தார். இவர் வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனை என்ன.. அவர் கடந்து வந்த பாதை.. கண்ணீர் கதையை இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஆந்திராவில் பிறந்தவர் தான் சாந்தினி பிரகாஷ், இவரின் ஒட்டுமொத்த குடும்பமும் கலை குடும்பம் தான். அதாவது சாந்தினியின் அம்மா, சித்தி என அனைவருமே டூப் நடிகர்களாக இருந்துள்ளனர். அம்மாவின் அரவணைப்பில் இருந்து வந்த சாந்தினி திடீரென, குடும்ப சூழ்நிலை காரணமாக கிறிஸ்துவ விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதற்கு காரணம், சாந்தினியின் அப்பாவிற்கு இருந்த குடிப்பழக்கத்தால், குடும்பத்தில் அம்மா, அப்பா மனக்கசப்பு ஏற்பட்டு பின் இருவருமே பிரிந்துவிட்டனர். அம்மாவின் அரவணைப்பில் இருக்க வேண்டிய வயதில், தனியாக ஹாஸ்டலில் வளர்ந்துள்ளார் சாந்தினி. தாயை பிரிந்ததில் ஏற்பட்ட மன அழுத்தத்தால் துவண்டு போன சாந்தினிக்கு ஆறுதலாக இருந்தது பைபிள் தான்.

சாந்தினி பிரகாஷ்: அங்கு 12 வகுப்பு வரை படித்த சாந்தினிக்கு, சினிமாவில் நடனக்கலைஞராக வேண்டும் என்ற ஆசை வந்துள்ளது. இதனால், நடனம் கற்றுக்கொண்டார். அப்போது தான், சாந்தினிக்கு விஜய் டிவியில் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த போட்டிகள் கலந்து கொண்ட சாந்தினி முதல் இரண்டு சுற்றிலேயே எலிமினேட்டாகி வெளியேறினார். அதன் பின் மீண்டும் ஒயில்கார்ட் போட்டியாளராக வந்து இறுதி போட்டி வரை சென்றார். இதைத்தொடர்ந்து, அதே விஜய் தொலைக்காட்சியில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு சாந்தினி பிரகாஷிற்கு கிடைத்தது. கல்யாண முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி போன்ற தொடர்களில் நடித்தார்.
இதெல்லாம் மூஞ்சா: பத்தோடு பதினொன்னாக நடித்து வந்த சாந்தினி பிரகாஷ், தன்னைத் தானே செதுக்கிக் கொண்டு, வானத்தைப்போல சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். பின் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியலில் அசத்தலான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து தனக்கு என்று தனி இடத்தை பிடித்தார். வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு உத்வேதமாக இருந்தது ரம்யா கிருஷ்ணன் தான் என பேட்டி ஒன்றில் சாந்தினி பிரகாஷ் கூறி உள்ளார். அதுமட்டுமில்லாமல், சன் விருது வழங்கும் விழாவில் பேசிய சாந்தினி, இது எல்லாம் மூஞ்சா... நீ நடிச்சு எங்கே ஜெயிக்க போறே, இது எல்லாம் தேவையில்லாத வேலை என் அம்மாவே விமர்சித்தாங்க, ஆனால், மக்கள் என்னை ஏற்றுக்கொண்டார்கள் என கண்கலங்கி பேசி இருந்தார்.

சிம்பு மீது காதல்: நடிகை சாந்தினி பிரகாஷ், டார்லிங் டார்லிங், சின்ன பாப்பா பெரிய பாப்பா, சுமங்கலி, பூவே பூச்சூடவா, வானதைப்போல, அபி தையல்காரர் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்து தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கிள் பசங்க நிகழ்ச்சியில், கூமாபட்டி தங்கபாண்டியுடன் இணைந்து ஆட்டம் போட்டு வருகிறார். அண்மையில் இவர்கள் இருவரும் சேர்ந்து சூர்யவம்சம் படத்தில் வரும் 'சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு' என்ற பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டு இருந்தனர். சிம்புவின் தீவிர ரசிகையான சாந்தினி பிரகாஷ், அந்த நிகழ்ச்சியில், சிம்புவை திருமணம் செய்ய எனக்கு ஆசையாக இருக்கிறது என்று தனது விருப்பத்தை டி.ராஜேந்தர் முன்னிலையிலேயே வெளிப்படுத்தினார். தன் மீதும், தனது திறமை மீதும் மட்டுமே நம்பிக்கை வைத்து, பல வலிகளை கடந்து இன்று அனைவருக்கும் தெரியும் ஒரு நடிகையாக சாந்தினி பிரகாஷ் மாறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











