»   »  பெரிய இயக்குனர் என்ற ஈகோவே இல்லாமல் ரம்யா கிருஷ்ணனிடம் 2 முறை மன்னிப்பு கேட்ட ராஜமவுலி

பெரிய இயக்குனர் என்ற ஈகோவே இல்லாமல் ரம்யா கிருஷ்ணனிடம் 2 முறை மன்னிப்பு கேட்ட ராஜமவுலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாகுபலி 2 இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் ராஜமவுலி நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டார்.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 படத்தில் பிரபாஸ், ராணா அம்மா கதாபாத்திரமான சிவகாமி கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். வழக்கம் போல் தனது நடிப்பால் அவர் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் ராஜமவுலி ரம்யா கிருஷ்ணனிடம் இரண்டு முறை மன்னிப்பு கேட்டுள்ளார்.

சிவகாமி

சிவகாமி

சிவகாமி கதாபாத்திரம் மிகவும் அழுத்தமானது என்பதால் ராஜமவுலி முதலில் வேறு நடிகையை தேடியுள்ளார். அப்போது அவர் லட்சுமி மஞ்சுவை அணுகி சிவகாமியாக நடிக்குமாறு கேட்டுள்ளார்.

லட்சமி மஞ்சு

லட்சமி மஞ்சு

பிரபாஸ், ராணாவுக்கு அம்மாவாக நடிக்கும் அளவுக்கு தனக்கு வயதாகவில்லை என்று கூறி லட்சுமி மஞ்சு பாகுபலி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.

ரம்யா கிருஷ்ணன்

ரம்யா கிருஷ்ணன்

லட்சுமி மஞ்சு நடிக்க மறுத்த பிறகே ராஜமவுலி ரம்யா கிருஷ்ணனை அணுகியுள்ளார். முதலிலேயே ரம்யா கிருஷ்ணனை அணுகாததற்காக ஹைதராபாத்தில் நடந்த பாகுபலி 2 தெலுங்கு பதிப்பு இசை வெளியீட்டு விழாவில் ராஜமவுலி ரம்யா கிருஷ்ணனிடம் மேடையில் மன்னிப்பு கேட்டார்.

ராஜமவுலி

ராஜமவுலி

பாகுபலி 2 தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அந்த நிகழ்ச்சியிலும் ராஜமவுலி ரம்யா கிருஷ்ணனிடம் மீண்டும் மன்னிப்பு கேட்டார்.

English summary
Director Rajamouli has apologised to Ramya Krishnan for not approaching her first for Sivakami character in Baahubali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil