»   »  பாசமிகு ரசிகர்களே.. பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என தெரிய இன்னும் கொஞ்சம் லேட் ஆகுமாம்!

பாசமிகு ரசிகர்களே.. பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என தெரிய இன்னும் கொஞ்சம் லேட் ஆகுமாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விளம்பரப்படுத்தும் பணிகளை அதிகம் மேற்கொள்ள படக்குழு திட்டமிட்டுள்ளதால், பாகுபலி-2 அடுத்த ஆண்டு இறுதிவாக்கில் வெளியாகிறது. முன்னதாக, கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூலை வாரிக் குவித்தது.

Rajamouli delaying Baahubali-2

சீனாவில் வெளியிடுவதற்காக, இ-ஸ்டார்ஸ் நிறுவனம் 'பாகுபலி' படத்தின் உரிமையை வாங்கியிருக்கிறது. ஜப்பான் மொழியிலும் திரைப்படம் வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் இப்படத்தை விளம்பரப்படுத்த படக்குழு களம் இறங்கியிருப்பதால், 'பாகுபலி' இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

விளம்பர பணிகளை முடித்துவிட்டு, இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பை முடித்து 2016 நவம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறை வெளியீடாக 'பாகுபலி 2' வெளியாக இருந்த நிலையில் பட ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது ரசிகர்களின் பொறுமையை சோதித்துள்ளது.

'பாகுபலி' முதல் பாகத்துக்கான படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பு முடிந்தது. ஆயினும் 100 நாட்கள் கூட அந்த படப்பிடிப்பு நடைபெறவில்லை. இன்னும் 60% படப்பிடிப்பு பணிகள் நிலுவையிலுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற படத்தின் கிளைமாக்ஸ் டிவிட்ஸ்ட் உடைய இன்னும் சில மாதங்கள் பொருத்திருக்க வேண்டியது ரசிகர்களுக்கு அவசியம்.

English summary
Now, Rajamouli is not settled to work on Baahubali. Earlier, reports stated that, Rajamouli would start Baahubali 2 shooting in November and will release the film in the mid of 2016.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil