»   »  மோகன்லால் படம் கருடாவை இயக்குகிறேனா? எஸ்எஸ் ராஜமௌலி விளக்கம்!

மோகன்லால் படம் கருடாவை இயக்குகிறேனா? எஸ்எஸ் ராஜமௌலி விளக்கம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெரும் பட்ஜெட்டில் மோகன்லால் நடிக்கும் கருடா படத்தை எஸ்எஸ் ராஜமௌலி இயக்குகிறார் என்று சில தினங்களுக்கு முன் பெரும்பாலான இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியானது நினைவிருக்கலாம்.

ஆனால் இதுபற்றி மோகன்லாலோ, ராஜமௌலியோ எதுவும் கூறவில்லை. இப்போது ராஜமௌலி அதுபற்றி வாய் திறந்துள்ளார்.

ராஜமௌலி

ராஜமௌலி

சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக கேரளா வந்திருந்த ராஜமௌலியிடம் இதுகுறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த ராஜமௌலி, "கேரளா எனக்குப் பிடிக்கும். இந்த மாதிரி பிரமாதமான லொகேஷன்களைப் பார்க்க முடியாது.

மோகன்லால்

மோகன்லால்

மோகன்லால் நான் மிகவும் மதிக்கும் கலைஞர். அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலாகத்தான் இருக்கிறேன்.

பாகுபலி 2-ல்தான் முழுக் கவனமும்

பாகுபலி 2-ல்தான் முழுக் கவனமும்

ஆனால் இப்போதைக்கு என் கவனமெல்லாம் பாகுபலி 2-ஐ ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புக்கு ஏற்ற வகையில் உருவாக்குவதில்தான் உள்ளது.

வதந்தி

வதந்தி

கருடா படம் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அப்படி ஒரு செய்தியை நான் ஊடகங்களில்தான் படித்தேன். எல்லாம் வெறும் வதந்திதான்," என்றார்.

பாகுபலி 3-ம் பாகம் உண்டா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதில் கூறவில்லை. அதே நேரம் மறுப்பும் தெரிவிக்கவில்லை. பாகுபலியின் மூன்றாவது பாகம் என்பது முதலிரு பாகங்களின் தொடர்ச்சியாக இருக்காது. கதையும் களமும் வேறாக இருக்கும் என்று ஏற்கெனவே ஃபேஸ்புக்கில் அவர் கூறியிருந்தது நினைவிருக்கலாம்,

English summary
SS Rajamouli denied that he hasn't any plan to direct Mohan Lal in near future.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil