»   »  போலி' சாதனைக்காக தியேட்டர்களை "பிளாக்" செய்ய மாட்டோம்: ராஜமெளலி

போலி' சாதனைக்காக தியேட்டர்களை "பிளாக்" செய்ய மாட்டோம்: ராஜமெளலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: 'போலி' சாதனைக்காக தியேட்டர்களை பிளாக் செய்ய மாட்டோம் என 'பாகுபலி' பட இயக்குநர் ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. இந்தியாவில் பல மொழிகளிலும் ஒரே சமயத்தில் வெளியான இப்படம், வசூலில் சாதனை படைத்துள்ளது.


இப்படம் வெளியாகி 50 நாட்கள் கடந்துள்ள நிலையில், ராஜமௌலி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.


அதெல்லாம் அந்தக் காலம்...

அதெல்லாம் அந்தக் காலம்...

ஒரு திரைப்படம் 50 நாட்கள், 100 நாட்கள், 175 நாட்கள் ஓடிய காலம் கடந்துவிட்டது. இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் ரிலீஸ் தேதியிலேயே 1000 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.


3 வாரங்களில்...

3 வாரங்களில்...

இதனால் 3-4 வாரங்களில் படத்தை பெரும்பாலானோர் பார்த்துவிடுகின்றனர். சில பெருந்திரையரங்குகள் மட்டும் அதன் பிறகும் அப்படத்தை திரையிடுவதைத் தொடர்கின்றனர்.


ரசிகர்களின் கோரிக்கை...

ரசிகர்களின் கோரிக்கை...

ஓரிரு வாரங்களிலேயே படங்கள் திரையரங்குகளில் நிறுத்தப்படுவதால் சில நேரங்களில் நடிகர்களின் ரசிகர்கள் குறிப்பிட்ட ஒரு திரைப்படத்தை கூடுதலாக சில நாட்களுக்கு திரையிடுமாறு கேட்கும்போது சற்று வேதனையாக இருக்கிறது.


போலியான சாதனைகள்...

போலியான சாதனைகள்...

சில ரசிகர்கள் தங்கள் கைக்காசைக் கொடுத்து படத்தை திரையிடச் செய்கின்றனர், சில இடங்களில் திரையரங்கு உரிமையாளர்கள் ரசிகர்களுக்காக அவர்களே திரைப்படத்தை திரையிடுகின்றனர்.. போலியான சாதனைகள் மூலம் நாம் பெறப்போவது என்ன நண்பர்களே?


மறக்க முடியாத வெற்றி...

மறக்க முடியாத வெற்றி...

ரசிகர்கள் எங்களுக்கு மறக்கமுடியாத வெற்றியை அளித்துள்ளனர். இதை நாங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்வோம். இதைவிட வேறு எதுவும் எங்களுக்குத் தேவையில்லை.


மொத்தமாக பிளாக்...

மொத்தமாக பிளாக்...

திரையரங்குகளை மொத்தமாக பிளாக் செய்து கொள்ளும் நோய் அண்மைக் காலமாக நம் சினிமாத் துறையில் ஊடுருவியிருக்கிறது. இதை தடுத்து நிறுத்தும் நேரம் வந்துவிட்டது.


புதிய படங்களுக்கு வழி...

புதிய படங்களுக்கு வழி...

பங்குகளை வழங்கும் திரையரங்குகளில் 'பாகுபலி' தொடர்ந்து திரையிடப்படும். அதற்கு வாய்ப்பில்லாதபோது புதிய படங்களுக்கு நாங்கள் வழிவிடுவோம். போலி சாதனைக்காக திரையரங்குகளை பிளாக் செய்ய மாட்டோம்" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


பாகுபலி-2...

பாகுபலி-2...

அடுத்த மாதம் 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தொடங்க உள்ளது. அடுத்தாண்டு பாகுபலியின் இரண்டாம் பாகம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


English summary
Slamming the ‘100 days’ culture prevalent in the Telugu film industry, ace filmmaker SS Rajamouli asserted that he will not block theatres just to create “fake records”.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil