»   »  பிரபாஸுக்கு ஜென்மத்திற்கும் மறக்க முடியாத பரிசளித்த ராஜமவுலி

பிரபாஸுக்கு ஜென்மத்திற்கும் மறக்க முடியாத பரிசளித்த ராஜமவுலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: 5 ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் நடிக்காமல் பாகுபலி 2 படத்திற்காக பணியாற்றிய பிரபாஸை பாராட்டி ராஜமவுலி போர்க்கவசத்தை பரிசளித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த படம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்கள் படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

பிரபாஸ்

பிரபாஸ்

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்களில் நடிப்பதற்காக பிரபாஸ் 5 ஆண்டுகள் செலவிட்டுள்ளார். இந்த 5 ஆண்டுகளில் அவர் வேறு எந்த படங்களிலும் நடிக்கவில்லை.

பாகுபலி

பாகுபலி

82 கிலோ எடை இருந்த பிரபாஸ் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரத்திற்காக தனது எடையை 105 கிலோவாக உயர்த்தினார். கிட்டத்தட்ட 600 நாட்கள் பாகுபலி படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.

பரிசு

பரிசு

பாகுபலி படத்திற்காக 5 ஆண்டுகளை அர்ப்பணித்த பிரபாஸை பாராட்டி படத்தில் அவர் பயன்படுத்திய போர்கவசத்தை அவருக்கு பரிசளித்துள்ளார் ராஜமவுலி.

ராஜமவுலி

ராஜமவுலி

சத்ரபதி படத்தில் வேலை பார்த்ததில் இருந்து நானும், பிரபாஸும் நண்பர்களாகிவிட்டோம். என் நண்பரானதற்கு நன்றி பிரபாஸ். பாகுபலி கதாபாத்திரத்திற்கு பிரபாஸை தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என்றார் ராஜமவுலி.

English summary
Impressed by the dedication of Prabhas for the Baahubali franchise, director Rajamouli has gifted the iconic Baahubali armour to the actor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil