»   »  யாருமே போகாத இடத்திற்கு போகும் ராஜமௌலி.. பாகுபலிக்கு கிடைத்த கௌரவம்!

யாருமே போகாத இடத்திற்கு போகும் ராஜமௌலி.. பாகுபலிக்கு கிடைத்த கௌரவம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐதராபாத் : இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் படங்கள் என்றாலே பிரமாண்டங்களுக்குக் கொஞ்சமும் பஞ்சம் இருக்காது. இவரது பாகுபலி படத்தைத் தொடர்ந்து அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் என்ன கதையை கையில் எடுப்பார் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் மல்ட்டி ஸ்டாரர் படம் பற்றிய சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்தப் படத்திற்காக ஒரு பாக்ஸிங் கதைக்களத்தை ராஜமௌலி கையில் எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Rajamouli goes to pakistan

இந்த நிலையில் ராஜமௌலியின் பிரமாண்டமான 'பாகுபலி' படம் பாகிஸ்தான் சினிமா விழாவில் திரையிடுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாம். இந்த விழாவில் திரையிடப்படும் ஒரே இந்திய திரைப்படம் இதுதானாம்.

இந்த திரைப்பட விழாவுக்காக ராஜமௌலியை அங்கு அழைத்துள்ளார்கள். இதனால், ராஜமௌலி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், அங்கு செல்ல ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தென்னிந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கு அழைப்பு வந்த முதல் பிரபலம் ராஜமௌலி தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Rajamouli's 'Baahubali' film has been selected for screening at the Pakistan Film Festival. Rajamouli has been invited for this film festival.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X