Don't Miss!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- News
பிரதமர் குறித்த பிபிசி ஆவணப்படம்.. தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவோம்.. திருமாவளவன் அறிவிப்பு!
- Lifestyle
தக்காளி சாஸ் வெச்சு இத்தனை பொருட்களை சுத்தம் செய்ய முடியுமா? இத படிச்சு நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க...
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Automobiles
2-3 லட்ச ரூபா டவுண்பேமென்டிலேயே இந்த எஸ்யூவி கார்களை வாங்கிடலாம்! நம்பவே முடியல.. இந்த காரைகூட வாங்க முடியுமா?
- Sports
முகமது சிராஜை ஏமாற்றுகிறாரா ரோகித்.. நன்றாக ஆடியும் அங்கீகாரம் இல்லை.. மஞ்ச்ரேக்கர் குற்றச்சாட்டு
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- Finance
பெண்கள் ஐபிஎல்.. 4670 கோடி கல்லாகட்டிய BCCI.. இங்கேயும் அம்பானி, அதானி..!
அந்த விஷயத்தை நொறுக்குனதே அஜித் தான்.. சினிமா ரவுண்ட் டேபிளில் பேசிய ராஜமெளலி.. ரசிகர்கள் ஹாப்பி!
சென்னை: இந்த ஆண்டு ஆர்ஆர்ஆர் படம் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ள இயக்குநர் ராஜமெளலி ஃபிலிம் கம்பேனியன் யூடியூப் சேனலில் வெளியாகி உள்ள சினிமா 2022 ரவுண்ட் டேபிளில் அஜித் பற்றி பேசியிருப்பது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
சினிமா விழாக்களிலேயே அஜித் பற்றி பேசினால் எந்தவொரு பிரபலமாக இருந்தாலும் கைதட்டல்கள் அள்ளும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
ஆனால், கைதட்டல்களை பெற வேண்டும் என்பதற்காக எல்லாம் ராஜமெளலி அஜித் பற்றி பேசவில்லை. உண்மையாகவே அஜித் செய்த அந்தவொரு சாதனை தான் அவரை அப்படி பேச வைத்துள்ளது என அஜித் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
புஷ்பா இயக்குநர் - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் ஆர்ஆர்ஆர் பட ஹீரோ?: டோலிவுட்டின் அடுத்த ஆக்சன் மஜா!

ஆணழகன் அஜித்
"ஆணழகா உன் அடிமை இங்கே" என அஜித்துக்கு பாட்டே உள்ளது. எந்தவொரு ஹீரோயினாக இருந்தாலும், அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்து விட மாட்டோமா என ஏங்குவது வழக்கம் தான். அஜித்தின் ஹேண்ட்ஸம் ஆன தோற்றத்தை வர்ணிக்காத சினிமா பிரபலங்களே இருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், அழகு என்பது லுக்கில் இல்லை நல்ல நடத்தையில் தான் உள்ளது என அந்த அஜித்தே சினிமா ரசிகர்களுக்கு புரிய வைத்து விட்டார்.

ராஜமெளலி பேச்சு
ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கிய இயக்குநர் ராஜமெளலியை ஒட்டுமொத்த உலகமே பாராட்டி வருகிறது. இந்த ஆண்டு வெளியான ஹாலிவுட் படங்களுடன் போட்டி போடும் அளவுக்கு ஒரு இந்திய படத்தை கொடுத்துள்ள ராஜமெளலி சமீபத்தில் ஃபிலிம் கம்பேனியன் யூடியூப் சேனல் சார்பாக நடத்தப்பட்ட சினிமா 2022 ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசி உள்ளார்.

கமல் முதல் லோகேஷ் வரை
கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ், பிரித்விராஜ், ராஜமெளலி, கெளதம் மேனன் மற்றும் சீதா ராமம் படத்தின் தயாரிப்பாளர் ஸ்வப்னா தத் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்த ஆண்டு சினிமா பற்றி பேசினர். இதில், நடிகர் அஜித் பற்றி ராஜமெளலி பேசியதை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அதை உடைத்தவர் அஜித்
கோல்டன் குளோப் விருது போட்டியில் பங்கேற்றுள்ள ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கிய இயக்குநர் ராஜமெளலி பேசுகையில், ஒரு கட்டத்தில், ஹீரோன்னா ஹேண்ட்ஸம்மா இருக்கணும், டை அடித்து விட்டுத் தான் நடிக்கணும் என்கிற பழக்கத்தை தற்போது பல ஹீரோக்கள் மாற்றி வருகின்றனர். ஹீரோவோட தலைமுடி நரைக்க கூடாது என இருந்த சினிமாவில் அப்படியொரு விதியை உடைத்தது நடிகர் அஜித் குமார் தான் என ராஜமெளலி பேசியதை கேட்டதும் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஆமோதித்த கமல்
ராஜமெளலி அஜித் பற்றிய அந்த விஷயத்தை சொன்னதுமே உடனடியாக 'ஆம்' என தலையாட்டி ஆமோதித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குநரான ராஜமெளலி அஜித் பற்றி பேசியதை கேட்ட ரசிகர்கள் இவர்கள் கூட்டணியில் ஒரு ராஜாங்க படம் வந்தால் எப்படி இருக்கும் என கமெண்ட் போட்டு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

செகண்ட் சிங்கிள் ஆன் தி வே
துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சில்லா சில்லா பாடல் வெளியான நிலையில், அடுத்த பாடல் 'காசேதான் கடவுளடா' விரைவில் வெளியாக உள்ள சிக்னலை இசையமைப்பாளர் ஜிப்ரான் ட்வீட் போட்டு அஜித் ரசிகர்களை உச்சகட்ட உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளார். ராஜமெளலியின் இந்த வீடியோவையும் அஜித் ரசிகர்கள் அதில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.