»   »  ஸ்ரீதேவி பற்றி நான் 'அப்படி' பேசியது தப்பு தான்: ராஜமவுலி வருத்தம்

ஸ்ரீதேவி பற்றி நான் 'அப்படி' பேசியது தப்பு தான்: ராஜமவுலி வருத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஸ்ரீதேவி பற்றிய அந்த விபரங்களை நான் வெளிப்படையாக தெரிவித்தது தவறு, அதற்காக வருத்தப்படுகிறேன் என்று இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

பாகுபலி படத்தில் சிவகாமி தேவியாக நடிக்க பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியிடம் தான் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி முதலில் கேட்டுள்ளார். ஆனால் ஸ்ரீதேவி ஓவராக சம்பளம் கேட்டதால் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை.

ஸ்ரீதேவி நடிக்க மறுத்த பிறகு அந்த கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.

ராஜமவுலி

ராஜமவுலி

பாகுபலி படத்தில் நடிக்க ஸ்ரீதேவி ரூ. 8 கோடி சம்பளம் கேட்டார். மேலும் 5 பிசினஸ் கிளாஸ் விமான டிக்கெட்டுகள், ஹைதராபாத்தின் பெரிய ஹோட்டலில் 5 அறைகள், இந்தி பதிப்பின் லாபத்தில் ஒரு பங்கு கேட்டார் என்று ராஜமவுலி முன்பு பேட்டியளித்திருந்தார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

நான் ஒன்றும் ரூ. 8 கோடி கேட்கவில்லை. ராஜமவுலி என்னைப் பற்றி இப்படி கூறியிருப்பது வருத்தமாக உள்ளது. சம்பள விபரத்தை வெளிப்படையாக தெரிவிக்க எந்த இயக்குனருக்கும் உரிமை இல்லை என்று ஸ்ரீதேவி அண்மையில் தெரிவித்தார்.

வருத்தம்

வருத்தம்

ஸ்ரீதேவியின் பேட்டியை அடுத்து ராஜமவுலி கூறியிருப்பதாவது, யார் பேச்சை நம்புவது என்பதை மக்களே முடிவு செய்யட்டும். ஆனால் சில விபரங்களை நான் வெளிப்படையாக கூறியிருக்கக் கூடாது. அது தவறு. அதற்காக வருந்துகிறேன் என்று ராஜமவுலி கூறியுள்ளார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

பாகுபலியில் நடிக்க முடியாவிட்டால் என்ன ராஜமவுலியின் மற்றொரு படத்தில் ஸ்ரீதேவி நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Director SS Rajomouli has regretted about revealing Sridevi's remuneration for Baahubali in public platform. It is noted that Sridevi refused to act in Baahubali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil