»   »  பாகுபலி பற்றிய முக்கிய ரகசியத்தை சொன்ன ராஜமவுலி

பாகுபலி பற்றிய முக்கிய ரகசியத்தை சொன்ன ராஜமவுலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: அமரேந்திர பாகுபலி கதாபாத்திரம் பிரபாஸுக்காகவே எழுதப்பட்டதாக இயக்குனர் ராஜமவுலி தெரிவித்துள்ளார்.

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடித்த பாகுபலி 2 படம் உலக அளவில் ரூ. 1,250 கோடி வசூல் செய்துள்ளது. உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது பாகுபலி 2.


இந்நிலையில் படம் பற்றி ராஜமவுலி கூறும்போது,


பிரபாஸ்

பிரபாஸ்

நானும், பிரபாஸும் இதற்கு முன்பு 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு படத்தில் சேர்ந்து பணியாற்றினோம். அதில் இருந்து நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக உள்ளோம்.


பேச்சு

பேச்சு

நானும், பிரபாஸும் சேர்ந்தால் மணிக்கணக்கில் ஏன் இரவு முழுவதும் கூட பேசிக் கொண்டிருப்போம். பாகுபலி பற்றி மட்டும் அல்ல படம் எடுப்பது உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி பேசுவோம்.
டேட்ஸ்

டேட்ஸ்

பாகுபலிக்காக பிரபாஸிடம் ஒன்றரை ஆண்டு டேட்ஸ் கேட்டேன். அவரோ சிரித்துக் கொண்டே இந்த படத்தை ஒன்றரை ஆண்டுகளில் முடிக்க முடியாது என்று கூறி மூன்றரை ஆண்டுகளை ஒதுக்கினார்.


அமரேந்திர பாகுபலி

அமரேந்திர பாகுபலி

அனுஷ்கா, ரம்யா, சத்யராஜ் ஆகியோரை கதாபாத்திரத்திற்கு ஏற்றவர்களாக கருதி தேர்வு செய்தோம். ஆனால் அமரேந்திர பாகுபலி கதாபாத்திரம் பிரபாஸுக்காகவே எழுதப்பட்டது என்றார் ராஜமவுலி.


English summary
Director Rajamouli has revealed that Amarendra Baahubali character was written exclusively for his good friend Prabhas.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil