»   »  இந்தி ரசிகர்களையும் கவர்ந்த பாகுபலி... கருத்துக் கணிப்பில் 'நம்பர் 1'

இந்தி ரசிகர்களையும் கவர்ந்த பாகுபலி... கருத்துக் கணிப்பில் 'நம்பர் 1'

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கடந்த வருடம் மக்களை அதிகம் கவர்ந்த திரைப்படம் எது? என்று பிரபலமான ஓர்மக்ஸ் மீடியா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் இந்திப் படங்களை மிஞ்சி புதிய சாதனை படைத்திருக்கிறது பாகுபலி.

இந்த நிறுவனம் இந்தியளவில் மக்களை அதிகம் கவர்ந்த படம் மற்றும் நடிக, நடிகையர் குறித்து மக்களிடம் ஒரு கருத்துக் கணிப்பை சமீபத்தில் நடத்தியது.

இதில் வாய்மொழியாக அதிகளவில் பேசப்பட்டு மக்களால் ரசிக்கப்பட்ட படங்கள் பட்டியலில் தென்னிந்திய சினிமாவான பாகுபலி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.

பாகுபலி

பாகுபலி

2015 ம் ஆண்டில் மக்களிடம் அதிக வரவேற்பை வாய்மொழியாகப் பெற்ற படம் எது என்று ஓர்மக்ஸ் மீடியா நிறுவனம் சமீபத்தில் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டது. இதில் அனைத்துப் படங்களையும் பின்தள்ளி ராஜமௌலியின் பாகுபலி திரைப்படம் நம்பர் 1 இடத்தைப் பிடித்திருக்கிறது.

பாகுபலி

பாகுபலி

இந்த கருத்துக் கணிப்பில் ராஜமௌலியின் பாகுபலி முதல் இடத்தையும், சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் 2 வது இடத்தையும் பிடித்திருக்கிறது. மேலும் மற்றொரு வரலாற்றுப் படமாக வெளியான பாஜிரோ மஸ்தானி(ரன்வீர் சிங்) 3 வது இடத்தைப் பிடித்திருக்கிறது.

நம்பர் 1 நடிகர்

நம்பர் 1 நடிகர்

ரசிகர்களின் மனங்கவர்ந்த நடிகர் பட்டியலில் சல்மான் கான்(பஜ்ரங்கி பைஜான்) முதலிடம் பெற்றிருக்கிறார். 2 வது மற்றும் 3 வது இடங்களை நடிகர்கள் நவாஜுதீன் சித்திக்(மஞ்சி மவுண்டைன்) மற்றும் அமிதாப் பச்சன்(பிக்கு) ஆகியோர் பெற்றிருக்கின்றனர்.

நடிகைகளில்

நடிகைகளில்

இதே போல நடிகைகளில் கங்கனா ரனாவத் (தனு வெட்ஸ் மனு) முதலிடம் பெற்றிருக்கிறார். 2 வது மற்றும் 3 வது இடங்களை தீபிகா படுகோனே (பாஜிரோ மஸ்தானி) மற்றும் அனுஷ்கா சர்மா(என்ஹெச் 10) அகியோரும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒட்டுமொத்தமாக இந்திப் படங்கள் மட்டுமே இடம்பிடித்த இந்த கருத்துக் கணிப்பு முடிவுகளில், இடம்பெற்ற ஒரே தென்னிந்திய திரைப்படம் பாகுபலி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
2015 Most liked Film: Prabhas Starrer Baahubali Beats Salman Khan's Bajrangi Bhaijaan and Other Hindi Films.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil