twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வேற லெவல்... தமிழ் இயக்குநர்கள் நிறைய கத்துக்கணும்... ஆர்ஆர்ஆர் படம் குறித்து ரசிகர்கள் கமெண்ட்!

    |

    சென்னை : இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் இன்றைய தினம் உலகளவில் வெளியாகியுள்ளது ஆர்ஆர்ஆர் படம். தமிழகத்தில் இதன் வெளியீட்டு உரிமையை லைகா கைப்பற்றியுள்ள நிலையில் 550 திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் ஷோவை ரசிகர்கள் காத்திருந்து பார்த்தனர்.

    Recommended Video

    RRR Review | ரெண்டு பேறும் தாறு மாறு performance | Ram Charan | NTR | SS Rajamouli

    RRR Review: ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆரின் ஆர்ஆர்ஆர் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!RRR Review: ராஜமெளலி, ராம்சரண், ஜூனியர் என்டிஆரின் ஆர்ஆர்ஆர் படத்தின் ட்விட்டர் விமர்சனம் இதோ!

    ஆர்ஆர்ஆர் படம்

    ஆர்ஆர்ஆர் படம்

    இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமான அளவில் உருவாகியுள்ள படம் ஆர்ஆர்ஆர். சுதந்திர காலகட்டத்தை நம் கண்முன்னே இந்தப் படம் நிறுத்தியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமான அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஆர்ஆர்ஆர் ரிலீஸ்

    ஆர்ஆர்ஆர் ரிலீஸ்

    மேலும் ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஷ்ரேயா உள்ளிட்டவர்களும் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா காரணமாக தள்ளிப் போன ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் இன்றைய தினம் செய்யப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் படம் ரிலீசாகியுள்ளது.

    தமிழகத்தில் 550 திரையரங்குகளில் ரிலீஸ்

    தமிழகத்தில் 550 திரையரங்குகளில் ரிலீஸ்

    படத்தின் தமிழக உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் 550 திரையரங்குகளில் மிகவும் பிரம்மாண்டமான அளவில் படம் ரிலீசாகியுள்ளது. அதிகாலை 3 மணியளவில் முதல் ஷோவை ரசிகர்களை இரவு முழுவதும் காத்திருந்து பார்த்துள்ளனர். படம் அனைத்து வகையிலும் பர்பெக்டாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

    விஷுவல் ட்ரீட்

    விஷுவல் ட்ரீட்

    மேலும் படம் மிகவும் விஷுவல் ட்ரீட்டாக அமைந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். படத்தின் மற்ற விஷயங்களை காட்டிலும், கதையை காட்டிலும் ஒளிப்பதிவு மிகவும் ஈர்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். படத்தின் பாடல்கள், நடனம் வேற லெவலில் இருந்ததாகவும் குறிப்பாக நாட்டு பாடல் வெகுவாக கவர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

    சமமான கேரக்டர்கள்

    சமமான கேரக்டர்கள்

    ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவருக்கும் படத்தில் சமமான கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல ஆலியா பட்டிற்கு படத்தில் எந்தவிதமான முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதேபோல அஜய் தேவ்கன் சிறிய கேரக்டரில் வந்தாலும் முக்கியமான ரோலை செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

    சிறப்பான சண்டை காட்சிகள்

    சிறப்பான சண்டை காட்சிகள்

    3 மணிநேரம் சென்றாலும் படம் போவதே தெரியாமல் காட்சிக்கு காட்சி சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மிகவும் திருப்திகரமான படமாக அமைந்திருந்ததாகவும் கண்டிப்பாக பிளாக் பஸ்டராக படம் அமையும் என்றும் கூறியுள்ளனர். சண்டை காட்சிகளும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும்

    இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும்

    ராஜமௌலி மீண்டும் இந்தப் படம் மூலம் தன்னை சிறப்பான இயக்குநராக நிரூபித்துள்ளதாகவும் ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். படத்தில் எல்லாமே ப்ளஸ்தான் என்றும் இந்தப் படம் மூலம் இந்தியாவிற்கு மிகச்சிறந்த பெருமை கிடைக்கும் என்றும் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

     புல்லரிக்க வைத்த காட்சிகள்

    புல்லரிக்க வைத்த காட்சிகள்

    சில காட்சிகளில் புல்லரிக்க வைத்ததாகவும் இதுபோன்ற படத்தை ராஜமௌலியை தவிர யாரும் எடுக்க முடியாது என்றும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டுவதாகவும் ரசிகர்கள் மேலும் கூறியுள்ளனர். படத்தின் முதல் ஷோவை பார்த்துள்ள ரசிகர்கள் அனைவரும் சிறப்பான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

    English summary
    Fans makes positive comments on Rajamouli's RRR movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X