ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பு ஓவர்.. கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!

ஹைதராபாத் : இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஹைதராபாத்தில் பிம்மாண்ட செட்டுகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் சமீபத்தில் படக்குழு வெளிநாடு சென்று சில காட்சிகளை படமாக்கி வந்தது.

தெலுங்கில் முன்னணி நாயகர்களாக உள்ள ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இணைந்து நடித்து வரும் இந்த திரைப்படத்தில் அஜய் தேவ்கான் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படும் நிலையில் கதாநாயகியாக அலியா பாட் நடிக்கிறார் மற்றும் ஸ்ரேயா சரண்,சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

மூன்றரை வயது குழந்தை ஜெசிக்காவிற்கு இதய நோய்... உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்

இந்தியாவில் நடக்க இருந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு சமீபத்தில் உக்ரேன் சென்ற படக்குழு அங்கும் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்து கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பிரம்மாண்ட படங்களை

பிரம்மாண்ட படங்களை

தெலுங்கில் வெளியான பிரம்மாண்ட படங்களில் ஒன்றான மகதீரா வெளியான போதே எஸ் எஸ் ராஜமௌலி தென்னிந்திய சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர் ஆனார். ராம்சரண், எஸ் எஸ் ராஜமௌலி கூட்டணியில் முதல் முறையாக வெளியான மகதீரா திரைப்படம் தற்போது உள்ள காலத்தையும் பூர்வஜென்மத்தையும் இணைக்கும் ஃபேன்டஸி படமாக வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனை செய்தது. குறிப்பாக இந்த படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி அதிக அளவில் பேசப்பட்டது. மகதீரா படத்திற்கான வரவேற்பு அதிக அளவில் இருந்ததால் இந்த திரைப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. மகதீரா வெற்றிக்குப் பிறகு தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை இயக்கி வந்த இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி பிரபாஸுடன் இணைந்த பாகுபலி இப்பொழுது இந்தியாவில் வெளியான தலை சிறந்த வரலாற்று படங்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது.

400 கோடி பட்ஜெட்டில்

400 கோடி பட்ஜெட்டில்

இதுவரை ராஜமௌலியின் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் ஒரு பாகம் மட்டும் வெளியாக முதல்முறையாக பாகுபலி இரண்டு பாகங்களாக வெளியாகி இரண்டும் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியது. பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா ,சத்யராஜ் ,ராணா, நாசர், ரம்யா கிருஷ்ணன் என மிகப் பெரிய பட்டாளமே இப்படத்தில் நடித்து இருக்க பாகுபலி இரண்டு பாகங்களும் உலக அளவில் மிகப்பெரிய வசூலை செய்தது. பாகுபலி வெற்றிக்குப் பிறகு எஸ் எஸ் ராஜமௌலியின் அடுத்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்க இப்பொழுது அதை விட பிரம்மாண்டமாக சுமார் 400 கோடி பட்ஜெட்டில் ஆர்ஆர்ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சுதந்திர போராட்ட வீரர்

சுதந்திர போராட்ட வீரர்

தெலுங்கில் முன்னணி நாயகர்களாக உள்ள ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இதனால் இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு, கொமராம்பீம் ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படும் இந்தப் படம் தமிழ, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளிலும் வெளியாகிறது. 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தை டிடிவி தான்யா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த முறை பாலிவுட் ரசிகர்களையும் கவரும் வகையில் பல முன்னணி பாலிவுட் நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். அந்த வகையில் நடிகர் அஜய் தேவ்கான் இப்படத்தில் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆலியா பாட் ஆர்ஆர்ஆர் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். ஸ்ரேயா சரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து முன்னோட்டக் காட்சிகள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்த நிலையில் சமீபத்தில் மேக்கிங் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களிடையே ஆவலை மேலும் கூடியுள்ளனர்.

கிளைமாக்ஸ் காட்சி

கிளைமாக்ஸ் காட்சி

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட் அமைத்து பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இறுதிகட்டமாக கிளைமாக்ஸ் காட்சி மட்டும் படமாக்கப்படாமல் இருந்தது. கிளைமாக்ஸ் காட்சியை படக்குழு வெளிநாட்டில் எடுக்க திட்டமிட்டு இருந்தது. எனவே சென்றமாதம் ராஜமௌலி மற்றும் படக்குழுவினர் படப்பிடிப்புக்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றிருந்தனர். கிட்டத்தட்ட 15 நாட்களாக நடைப்பெற்று வந்த அந்த படப்பிடிப்பில் பாடல்கள் மற்றும் முக்கிய காட்சிகளை படமாக்கியுள்ளனர்.

கேக் வெட்டி கொண்டாடி

கேக் வெட்டி கொண்டாடி

இந்த நிலையில் உக்ரைனில் நடக்க இருந்த படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றுவிட்டது. இதனால் மகிழ்ச்சியில் உள்ள இயக்குனர் எஸ் எஸ் ராஜமௌலி படக் குழுவுடன் இணைந்து படப்பிடிப்பை மிக விரைவாக முடித்த மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இந்தியா திரும்ப உள்ள படக்குழு அடுத்தகட்டமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விறுவிறு வேகத்தில் தொடங்க உள்ளது. வரும் அக்டோபர் 13ஆம் தேதி ஆர்ஆர்ஆர் படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. ஏற்கனவே கொரோனா இரண்டு அலைகள் வந்து படப்பிடிப்பு தாமதமானது அதனால் திரையரங்குகளும் முற்றிலும் மூடப்பட்டது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில் மூன்றாவது அலை வரவில்லை என்றால் படக்குழு குறித்த தேதியில் அனைத்து பணிகளையும் முடித்து படத்தை வெளியிட தயாராக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X