»   »  ஹாலிவுட் சாதனைகளை முறியடிக்க ரஜினியுடன் எப்போது கை கோர்ப்பீர்கள்? - ராஜமௌலியிடம் கேள்வி

ஹாலிவுட் சாதனைகளை முறியடிக்க ரஜினியுடன் எப்போது கை கோர்ப்பீர்கள்? - ராஜமௌலியிடம் கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி படம் உலக அளவில் நடத்தி வரும் சாதனைகளைச் சொல்லி சொல்லி நமக்கே அலுத்துவிட்டது. தினந்தோறும் சாதனைதான்.

அதுவும் தென்னிந்திய மொழிப் படங்களை எப்போதும் ஏளனமாகப் பார்க்கும் பாலிவுட் சினிமாவைப் புரட்டிப் போட்டிருக்கிறது பாகுபலி. இதுவரை ரூ 300 கோடிகளை வட இந்தியாவில் குவித்துவிட்டது இந்தப் படம்.

Rajamouli should join with Rajini to beat Hollywood movies

இந்த நிலையில் பிபிசி நிருபர் சமீபத்தில் ராஜமௌலியைச் சந்தித்து ஒரு கேள்வி எழுப்பியுள்ளார்.

"ஹாலிவுட் படங்களின் சாதனைகளை முறியடிக்க, இந்தியாவின் மிகப் பெரிய நடிகர், உலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நீங்கள் இணைவது எப்போது? இதை உலகமே ஆவலுடன் எதிர்நோக்குகிறது?" என்று கேள்வி எழுப்பினார்.

சற்று நேரம் அமைதியாக இருந்த ராஜமௌலி, "ரஜினிகாந்த் இந்தியாவின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்... அவருடன் இணைந்து பணியாற்றுவது என் கனவு. நிச்சயம் அவருடன் இணைந்து பணியாற்றுவேன். அதற்கான கதை அமையும் வரை காத்திருக்கிறேன்," என்றார்.

English summary
A TV Channel reporter asked SS Rajamouli whether the later wants to break Hollywood records, he would have to join with Superstar Rajinikanth.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil