»   »  உலக சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த இந்த லெஜண்டுக்கும் இன்றே பிறந்தநாள்

உலக சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த இந்த லெஜண்டுக்கும் இன்றே பிறந்தநாள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: பிரபல இயக்குனர் ராஜமவுலிக்கு இன்று பிறந்தநாள்.

தனது நகைச்சுவையால் நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் வைகைப்புயல் வடிவேலுவுக்கு மட்டும் அல்ல பிரபல இயக்குனர் ராஜமவுலிக்கும் இன்று தான் பிறந்தநாள்.

ராஜமவுலி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ராஜமவுலி

இன்று பிறந்தநாள் காணும் ராஜமவுலிக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 சாதனை

சாதனை

பாகுபலி படம் உருவானபோது தெலுங்கு படம் தானே என்று நினைத்தவர்கள் அது ரிலீஸான பிறகு உலக அளவில் அது செய்த சாதனையை பார்த்து மிரண்டு போனார்கள்.

 உலக சினிமா

உலக சினிமா

பாகுபலி, பாகுபலி 2 என்ற இரண்டு படங்களை அளித்து பிரபாஸை உலகம் முழுவதும் அறிய வைத்தவர் ராஜமவுலி. யாருய்யா இந்த இயக்குனர் என்று பலரும் திரும்பிப் பார்த்தனர்.

 முடியும்

முடியும்

பாகுபலிக்கு முன்பு மகதீரா, ஈகா போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் ராஜமவுலி. பெரிய ஹீரோக்களை வைத்து மட்டும் அல்ல நகைச்சுவை நடிகரையும் ஹீரோவாக்கி ஹிட் கொடுக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டியவர் ராஜமவுலி.

 வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

இன்று ராஜமவுலி, வடிவேலு மட்டும் அல்ல கோலிவுட், டோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்கிற்கும் பிறந்தநாள்.

English summary
Director Rajamouli, who has changed the face of Indian cinema is celebrating his 44th birthday today. We wish the legend a very happy birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil