»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

மத்திய பட்ஜெட்டில், திரைப்படத் துறைக்கு தொழில் துறை அந்தஸ்து அளித்திருப்பதற்கு திரைப்படத் து றையினர்மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், திரைப் படத்துறைக்கு தொழில் துறை அந்தஸ்தும்,வங்கிகளில் கடன் வாங்கும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது. இது திரைத் துறையினரி டை யே பெரும்உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.

தமிழ்த் தி ரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் அ.செ.இப்ராகிம் ராவுத்தர் இதுகுறித்துக் கூறு கையில், இதுமிகவும் சந் தோஷமான செய்தி. இந்த நல்ல அறிவிப் பை பட் ஜெட் மூலம் வெளியிட உறுது ணையாக இருந்தமத்திய அ மைச்சர் சுஷ்மா சுவராஜ், நிதிய மைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு எங்களது மனமார்ந்த நன்றி என்றுகூறினார்.

திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத் த லைவர் கே. ராஜன் கூறு கையில், திரைப்படத் தயாரிப்புக்கு வங்கிகளில்கடன் உதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது பாராட்டுக்குரியது. திரைத் துறைக்கு தொழில் துறை அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கையாகும். அது இப் போது நிறைவேறியுள்ளது. இது சந்தோஷத்தைத் தருகிறது என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil