twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "ரிலீஸ் ஆனால் தீயில் குதிப்போம்..." - 'பத்மாவத்' படத்துக்கு எதிரான போராட்டம் உச்சகட்டம்!

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    'பத்மாவத்' படம் வருமா வராதா?- வீடியோ

    டெல்லி : சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உருவாகியிருக்கும் படம் 'பத்மாவத்'.

    பத்மாவத் படம் ரிலீஸானால் தீயில் குதிப்போம் என ராஜஸ்தானில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    இதனால், படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டு ராஜஸ்தான், மத்திய பிரதேச உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    படத்துக்கு கடும் எதிர்ப்பு

    படத்துக்கு கடும் எதிர்ப்பு

    'பத்மாவத்' படத்தில் சித்தூர் மகாராணியை தவறாகச் சித்தரித்துள்ளதாக கூறி ராஜபுத்ர அமைப்பை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படத்திற்கு சென்சார் போர்டு அனுமதி அளித்த பின்னரும் படத்தை திரையிட விட மாட்டோம் என எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகின்றனர்.

    தடையை நீக்கிய சுப்ரீம் கோர்ட்

    தடையை நீக்கிய சுப்ரீம் கோர்ட்

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்தத் தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளது. இதனால் பத்மாவத் படத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.

    ராஜஸ்தானில் போராட்டம் உச்சகட்டம்

    ராஜஸ்தானில் போராட்டம் உச்சகட்டம்

    குஜராத் மற்றும் ராஜஸ்தானில் பல்வேறு இடங்களில் போராட்டங்களும், தீ வைப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன. ராஜஸ்தானில் போராட்டம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. சித்தூர்கர் கோட்டையை நோக்கி கண்டன பேரணியும் நடத்தப்பட்டது.

    தீயில் குதிப்போம்

    தீயில் குதிப்போம்

    இந்நிலையில், பத்மாவத் படத்தை ரிலீஸ் செய்தால், தங்கள் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்வதாக பெண்கள், கையில் வாளுடன் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதேபோன்று சித்தூர்கர் பகுதியில் தீயில் குதித்து தற்கொலை செய்து கொள்வதாக ஆயிரக்கணக்கான பெண்கள் பதிவு செய்து வைத்துள்ளனர்.

    மேல்முறையீடு

    மேல்முறையீடு

    பத்மாவத் படத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதியை நிறுத்திவைத்து படத்தின் ரிலீஸுக்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டு ராஜஸ்தான், மத்திய பிரதேச உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேற்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    இன்னும் தொடரும் சிக்கல்

    இன்னும் தொடரும் சிக்கல்

    குஜராத் மற்றும் ராஜஸ்தான் அரசுகளின் மேல்முறையீட்டு வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. மூன்று மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய 'பத்மாவத்' இன்னும் சிக்கலைச் சந்தித்து வருவது திரையுலகில் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

    English summary
    Sanjay Leela Bhansali's 'Padmaavat' movie will be reelased on January 25. In this scenario, Thousands of women in Rajasthan have warned that, If Padmaavat film released, those jump into fire. So, Rajasthan and Madhya Pradesh governments have appealed in supreme court to ban 'Padmaavat'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X