»   »  மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா ரஜினி, கமல் கெட்அப்பில் குத்தாட்டம்… பேய்கள் ஜாக்கிரதை

மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா ரஜினி, கமல் கெட்அப்பில் குத்தாட்டம்… பேய்கள் ஜாக்கிரதை

Posted By:
Subscribe to Oneindia Tamil

பேய்கள் இன்றி அமையாது இன்றைய தமிழ் சினிமா... காஞ்சனா பேய், டார்லிங் பேய், பேபி பேய் உலா வந்து கொண்டிருக்கும் தமிழகத்தில் இப்போது பேய்கள் ஜாக்கிரதை என்றொரு படமும் வரப்போகிறது.

இந்தப்படத்தில் மொட்டை ராஜேந்திரனும், தம்பி ராமையாவும் ரஜினி, கமல் கெட்அப்பில் குத்தாட்டம் வேறு போட்டிருக்கிறார்களாம். என்னடா இந்த தமிழக சினிமா ரசிகர்களுக்கு வந்த சோதனை என்கிறீர்களா? மனதை தைரியப்படுத்திக்கொண்டு மேற்கொண்டு படிங்கப்பா...


புதுமுகங்கள் அறிமுகம்

புதுமுகங்கள் அறிமுகம்

ரீசாய் சர்வேஷ் எண்டர்டைன்மெண்ட் பட நிறுவனம் சார்பில் ஜி.ராகவன் தயாரிக்கும் படம்தான் பேய்கள் ஜாக்கிரதை. இதில் நாயகனாக ஜீவரத்னம் நாயகியாக ஈஷான்யா நடிக்கின்றனர்.


தம்பி ராமையா - ராஜேந்திரன்

தம்பி ராமையா - ராஜேந்திரன்

தம்பி ராமையா, நரேஷ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, ஜான் விஜய், ஆடுகளம் நரேன், தருண்குமார், பிளாக் பாண்டி ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்தை கண்மணி இயக்குகிறார். இவர் சரணிடம் பல படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய இவர் தெலுங்கில் சிலபல படங்கள் இயக்கியுள்ளார்.


பேய் பயத்தில் தம்பி ராமையா

பேய் பயத்தில் தம்பி ராமையா

தன்னை ஒரு பேய் முப்பது வருடமாக கொலை செய்ய முயல்வதாகவும் அந்தப் பேயிடம் இருந்து எப்படியோ தப்பித்துக் கொண்டு இருப்பதாகவும் அந்த பேயினால் எப்போது வேண்டுமானாலும் தனக்கு ஆபத்து வரலாம் என்றும் நம்புகிறார் தம்பி ராமையா.


அட அது சும்மா

அட அது சும்மா

பேயே இல்லை என்ற கருத்து உடைய இளைஞன்தான் ஹீரோ. இந்த இரண்டு பேரும் சந்தித்து கருத்து மோதல் நடத்திக் கொள்ளும் சூழ்நிலையில் ஒரு சம்பவம் நடக்கிறது.


மாறிய கதை

மாறிய கதை

அந்த சம்பவம் காரணமாக பேயே இல்லை என்கிற முடிவுக்கு தம்பி ராமையாவும் பேய் நிஜமாகவே இருக்கிறது என்ற முடிவுக்கு ஹீரோவும் வருகிறார்கள். இருவரில் யார் சொல்வது உண்மை..? பொய்..? என்பதுதான் படத்தில் சஸ்பென்ஸ்.


இதில் என்ன ஸ்பெஷல்

இதில் என்ன ஸ்பெஷல்

தமிழ் சினிமா முழுவதும் பேய்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. வரும் பேய் படங்கள் எல்லாமே கல்லா கட்டுகின்றன. இப்போது மீண்டும் ஒரு பேய்படம் வருகிறது. இதில் என்ன வித்தியாசம் என்று படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்கிறார் இயக்குநர் கண்மணி.


பேய் படப்பிடிப்பு

பேய் படப்பிடிப்பு

இதன் படப்பிடிப்பு சென்னை, மாமல்லபுரம், மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பேய் வேகத்தில் நடந்து வருகிறது. பல குறும் படங்களுக்கு இசை அமைத்த மரிய ஜெரால்டு இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார்.


பாட்டாவே பாடிட்டாங்க

பாட்டாவே பாடிட்டாங்க

படத்தில் வரும் மூன்று பாடல்களில் ஒரு பாடல் மிக விசேஷமானது. கவிஞர் விவேகா எழுதிய அந்தப் பாடலை தம்பி ராமைய்யாவும் நான் கடவுள் ராஜேந்திரனும் பாடி இருக்கிறார்கள்


குத்து டான்ஸ்

குத்து டான்ஸ்

"ஒபாமாவை ஒதுங்கச் சொல்லு; அப்பாயின்ட்மென்ட் இல்ல.. அப்பாலிக்கா வரச் சொல்லு.. பில்கேட்சை பின்னால நிக்கச் சொல்லு; பிசியா இருக்கோம்.. அப்பாலிக்கா பாக்கச் சொல்லு" என்று பாடி ஆடியுள்ளனர் இருவரும்.


ரஜினி – கமல் கெட்அப்

ரஜினி – கமல் கெட்அப்

இந்தப் பாடல் காட்சியில் ராஜேந்திரன் ரஜினி கெட்டப்பிலும், தம்பி ராமையா கமல் கெட்டப்பிலும் நடித்திருக்கிறார்களாம்..!
இதைப் பாத்து பேயே ஓடிப்போயிருக்குமே!


English summary
Peigal Jaakirathai is a Tamil Movie. Directed by Kanmani. Thambi Ramaiah in the lead roles.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil