»   »  மீண்டும் கைகோர்க்கும் சிரிப்புக் கூட்டணி... ராஜேஷ் - சந்தானம்!

மீண்டும் கைகோர்க்கும் சிரிப்புக் கூட்டணி... ராஜேஷ் - சந்தானம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இயக்குநர் ராஜேஷ் முதன் முதலில் இயக்கி வெளியான 'சிவா மனசுல சக்தி' மாபெரும் வெற்றி பெற்றது.

அந்த படம் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் சந்தானத்தின் காமெடி. சந்தானத்திற்கும் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்த படம் இது.


'சிவா மனசுல சக்தி' வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் வெளியான 'பாஸ் என்கிற பாஸ்கரன்' முதல் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படம் வரை அனைத்துப் படங்களிலும் சந்தானத்திற்கு கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் இருக்கும்.


கடவுள் இருக்கான் குமாரு

கடவுள் இருக்கான் குமாரு

இயக்குநர் ராஜேஷ் இயக்கி வெளியான 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தில் மட்டுமே சந்தானம் நடிக்கவில்லை. அந்தப்படமும் தோல்வியைத் தழுவியது.
மீண்டும்

மீண்டும்

இந்நிலையில் மீண்டும் சந்தானத்துடன் இணைய திட்டமிட்டுள்ளார் ராஜேஷ். ஆனால் இந்த முறை சந்தானம் காமெடியன் அல்ல... ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படத்தைத் தான் ராஜேஷ் இயக்குகிறார்.
தேனாண்டாள்

தேனாண்டாள்

ராஜேஷ் சொன்ன கதை சந்தானத்திற்கு மிகவும் பிடித்து போனதே அவர் இப்படத்தில் நடிக்க முக்கிய காரணம். இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஜுலையில் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.


ஒன்லி ஹீரோ

ஒன்லி ஹீரோ

சந்தானம் இப்போது காமெடியனாக எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. சர்வர் சுந்தரம், சக்கப் போடு போடு ராஜா உள்பட ஐந்து படங்களில் ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார்.


English summary
Santhanam is joining with his favourite director Rajesh M in an untitled movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil