»   »  கடவுள் இருக்கான் குமாரு... 'டாஸ்மாக் ஸ்பெஷலிஸ்ட்' ராஜேஷ் எம்- ஜிவி புதிய கூட்டணி!

கடவுள் இருக்கான் குமாரு... 'டாஸ்மாக் ஸ்பெஷலிஸ்ட்' ராஜேஷ் எம்- ஜிவி புதிய கூட்டணி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோடம்பாக்கத்தின் டாஸ்மாக் ஸ்பெஷலிஸ்ட் எனப் பெயர் வாங்கிவிட்ட இயக்குநர் ராஜேஷ் தனது அடுத்த படத்தில் 'பேட் பாய்' ஜிவி பிரகாஷுடன் கூட்டணி அமைக்கிறார் என்பது பழைய செய்தி.

படத்தின் தலைப்புதான் இப்போது புது செய்தி. இந்தப் படத்துக்கு கடவுள் இருக்கான் குமாரு என்று தலைப்பு வைத்துள்ளார்.

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி சிவா தயாரிக்கும் இந்தப் படத்தின் கதாநாயகியாக அவிகா கோர் நடிக்கிறார். மற்றுமொரு கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிப்பது உறுதியாகியுள்ளது.

Rajesh M's Kadavul Irukkan Kumaru

இப்படத்திற்கு ஒளிப்பதிவு சக்தி சரவணன், கலை வைரபாலன். இப்படத்திற்கான படப்பிடிப்பு தள தேடுதலில் இயக்குநர், ஒளிப்பதிவாளர் மற்றும் கலை இயக்குநர் பாண்டிச்சேரியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். படப்பிடிப்பு தளங்களாக கடற்கரை ஓரங்களே தேந்தேடுக்கப்பட்டுள்ளன. கோவா, பாண்டிச்சேரி மற்றும் விசாகபட்டின்னம் போன்ற சரக்குக்கு புகழ்பெற்ற தளங்களில்தான் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

தெய்வ வாக்கு, சின்ன மாப்ளே, ராசையா, அரவிந்தன், சரோஜா போன்ற பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்த அம்மா கிரியேஷன்ஸ்
டி​​.சிவா, ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு 'கடவுள் இருக்கான் குமாரு' படத்தைத் தயாரிக்கிறார்.

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்துக்குப் பிறகு ராஜேஷ் இயக்கும் படம் இது.

'பயணத்தில் வரும் சந்திப்பு என்றுமே சுகமான நினைவுகள் தான். அப்படி ஒரு பயணத்தில் இரண்டு பெண்களை நாயகன் சந்திக்கிறான். நாயகனை ஒருத்தி காதலிக்க, நாயகனோ மற்றொருத்தியைக் காதலிக்கிறான். இதன் முடிவு படுசுவாரஸ்யம்' என்று கதை குறித்து சொல்கிறார் இயக்குநர் ராஜேஷ்.எம்.

படத்தில் தம்பி ராமையா, பிரம்மானந்தம், ஆர்ஜே பாலாஜி, நான் கடவுள் ராஜேந்திரன், ரோபோ ஷங்கரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் தோன்றுகிறார்.

இசை ஜிவி.பிரகாஷ் குமார். மார்ச் முதல் வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

English summary
Director Rajesh M's next movie is has been titled as Kadavul Irukkan Kumaru.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil