»   »  சந்தானத்திற்குப் பதில், ஆர்.ஜே.பாலாஜியுடன் கைகோர்த்த 'டாஸ்மாக்' ராஜேஷ்

சந்தானத்திற்குப் பதில், ஆர்.ஜே.பாலாஜியுடன் கைகோர்த்த 'டாஸ்மாக்' ராஜேஷ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது கடவுள் இருக்கான் குமாரு படத்தில் முதன்முறையாக ஆர்.ஜே.பாலாஜியுடன் கைகோர்த்திருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

ராஜேஷ் இயக்கத்தில் கடைசியாக வெளியான வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க அவரை நன்றாகக் கவிழ்த்து விட்டது.


இதனால் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான ஜி.வி.பிரகாஷுடன், கடவுள் இருக்கான் குமாரு என்று புதிய கூட்டணி அமைத்திருக்கிறார்.


இந்தப் படத்தில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க அவருக்கு ஜோடியாக அவிகா கோர் மற்றும் நிக்கி கல்ராணி என்று 2 நாயகியர் நடிகின்றனர்.இந்நிலையில் முதன்முறையாக தனது விருப்பமான காமெடி நடிகர் சந்தானத்திற்குப் பதில் ஆர்.ஜே.பாலாஜியை இந்தப் படத்திற்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார் ராஜேஷ்.


சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஆல் இன் ஆல் அழகுராஜா, ஒரு கல் ஒரு கண்ணாடி மற்றும் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க என்று ராஜேஷின் படங்கள் அனைத்தும் சந்தானம் இல்லாமல் இதுவரை வெளிவந்ததில்லை.


நானும் ரவுடிதான் படத்தில் ஆர்.ஜே.பாலாஜியின் டைமிங் காமெடி நன்கு எடுபட்டது. அந்தக் காமெடியால் கவரப்பட்டு தான் ராஜேஷ், ஆர்.ஜே.பாலாஜியை ஒப்பந்தம் செய்ததாக தெரிகிறது.


ராஜேஷின் 7 வருடத் திரையுலக வாழ்க்கையில் சந்தானம் இன்றி வெளியாகும் முதல் படம் கடவுள் இருக்கான் குமாரு. ஆர்.ஜே.பாலாஜி சந்தானம் இடத்தை நிரப்புவாரா? என்று பார்க்கலாம்.


First Time G.V.Prakash Team up with R.J.Balaji for Rajesh's next Movie.


60 words


கடவுள் இருக்கான் குமாரு படத்தில் நாயகனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்க அவருக்கு ஜோடியாக அவிகா கோர் மற்றும் நிக்கி கல்ராணி என்று 2 நாயகியர் நடிகின்றனர்.இந்நிலையில் முதன்முறையாக தனது விருப்பமான காமெடி நடிகர் சந்தானத்திற்குப் பதில் ஆர்.ஜே.பாலாஜியை இந்தப் படத்திற்காக ஒப்பந்தம் செய்திருக்கிறார் ராஜேஷ்.


English summary
First Time G.V.Prakash Team up with R.J.Balaji for Rajesh's next Movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil