»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சினிமா பாணியில் வில்லன் நடிகர்களை துணைக்கு அழைத்துக் கொண்டு வந்து கட்சிப் பிரமுகர் வீட்டைத் தாக்கிய வில்லன் நடிகரும், ஸ்டண்ட் மாஸ்டருமானராக்கி ராஜேஷ் உள்பட 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை வண்ணார்பேட்டை பர்மா காலனியில் வசித்து வருபவர் துரைராஜ். அதே பகுதியில் வசித்து வருபவர் ஜான்சன். இவர்கள் இருவரும் ஸ்டன்ட் மாஸ்டர்ராக்கி ராஜேஷின் உறவினர்கள். ராஜேஷ், நடிகர் விஜயகாந்த்தின் படங்களுக்கு சண்டைக் காட்சிகள் அமைத்துத் தருபவர்.

பணத்தகராறு காரணமாக துரைராஜூக்கும், ஜான்சனுக்கும் இடையே பிரச்சனை இருந்தது. இந்தத் தகராறைத் தீர்த்து வைக்க வடசென்னை மாவட்டக்குடியரசுக் கட்சித் தலைவர் ஜவகர் வந்துள்ளார். அப்போது ராக்கி ராஜேஷூம், அவரது மனைவியும் உடன் இருந்தார்கள்.

பேச்சுவார்த்தையின்போது, தகராறு ஏற்பட்டு ராக்கி ராஜேஷூக்கும், ஜவகருக்கும் சண்டை ஏற்படும் நிலை வந்தது. உடனே ராஜேஷின் மனைவிதிரைப்படத்தில் சண்டைக் காட்சிகளில் நடிக்கும் ஸ்டண்ட் நடிகர்களுக்குத் தகவல் கொடுத்தார்.

அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்தார்கள். ஜவகர் வீட்டுக்குச் சென்று வீட்டை அடித்து நொறுக்கினர். இதையடுத்து ஜவகர் போலீஸில் புகார்கொடுத்தார்.

புகாரின் பேரில் ராக்கி ராஜேஷ், ஸ்டண்ட் நடிகர்கள் புஷ்பராஜ், செல்வராஜ், யேசுதாஸ், சுரேஷ், பிரகாஷ், ராஜ் ஆகிய 7 பேரைப் போலீஸார் கைதுசெய்தனர்.

Read more about: actor, arrest, chennai, cinema, villain

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil