வசூலை குவித்த அண்ணாத்த.. இயக்குநர் சிவாவுக்கு தங்க செயின் பரிசளித்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

சென்னை: அண்ணாத்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை குவித்த நிலையில், இயக்குநர் சிறுத்தை சிவாவுக்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தங்க செயின் பரிசளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு அண்ணாத்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது.

அண்ணாத்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையிலும் படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவர் தீபாவளி

தலைவர் தீபாவளி

இந்த ஆண்டு தீபாவளிக்கு நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் மற்றும் சிம்புவின் மாநாடு உள்ளிட்ட திரைப்படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தலைவர் தீபாவளியாக ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் வெளியாகி ரஜினி ரசிகர்களை உற்சாகமடைய செய்தது.

அண்ணன் தங்கை பாசம்

அண்ணன் தங்கை பாசம்

விஸ்வாசம் படத்தின் மூலம் வெற்றியை கொடுத்த இயக்குநர் சிறுத்தை சிவா ரஜினிகாந்த் மற்றும் கீர்த்தி சுரேஷுக்கு இடையே ஒரு அற்புதமான அண்ணன் தங்கச்சி பாச போராட்ட கதையை படமாக உருவாக்கி இருந்தார். தங்க மீனாட்சியின் கஷ்டங்களை அவருக்கு தெரியாமல் போக்கும் காவல் தெய்வமாக அண்ணாத்த கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் அசத்தி இருந்தார்.

நெகட்டிவ் விமர்சனம்

நெகட்டிவ் விமர்சனம்

ஆனால், ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. ஏகப்பட்ட விமர்சகர்கள் அண்ணாத்த படத்தின் திரைக்கதை சரியாக இல்லை என்றும் இயக்குநர் சிவா ஏற்கனவே இயக்கிய வீரம், வேதாளம், விஸ்வாசம் படங்களை மிக்ஸ் பண்ணி அண்ணாத்த படத்தை உருவாக்கினார் என கடுமையாக விமர்சித்து இருந்தனர்.

நல்ல வசூல்

நல்ல வசூல்

அதே சமயத்தில் விமர்சனங்களை கடந்த வெற்றியாக அண்ணாத்த திரையரங்குகளில் திருவிழா கோலம் பூண்டது போல மிகப்பெரும் வெற்றியை பதிவு செய்தது. சன் பிக்சர்ஸ் தொடர்ந்து அண்ணாத்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் என்றும் நல்ல வசூலை தந்தது என்றும் பதிவிட்டு அதனை உறுதி செய்தது.

ரஜினி சிவா சந்திப்பு

ரஜினி சிவா சந்திப்பு

இந்நிலையில், இயக்குநர் சிறுத்தை சிவா மற்றும் ரஜினிகாந்த் சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளனர். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக நடிகர் ரஜினிகாந்த் சிவாவுடன் உரையாற்றி உள்ளார். அண்ணாத்த படம் பெற்ற வெற்றி குறித்தும் சிவாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Annaatthe Review | Annatha Review by Poster Pakiri | Superstar Rajinikanth | Siva | Filmibeat Tamil
தங்க செயின்

தங்க செயின்

மேலும், இயக்குநர் சிவாவை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் தங்க செயின் ஒன்றையும் அன்பு பரிசாக அளித்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அண்ணாத்த படத்தின் வெற்றிக்குத் தான் இந்த சந்திப்பா? இல்லை அடுத்த படத்தையும் நீங்களே பண்ணுங்க என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X