»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

கர்நாடகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ. 20,000 கொடுத்து உதவினார். மேலும் அவரதுமகனின் கல்விச் செலவுகளையும் அவரே ஏற்றுக் கொண்டார்.

கர்நாடக மாநிலம் மாண்டியா நகரைச் சேர்ந்தவர் யசோதாம்மா. இவரது கணவர் வேலு நாயுடு குடிப்பழக்கம்உடையவர். இதனால் குடும்பத்தைக் கவனிக்காமல் விட்டு விட்டார். குடும்பத்தின் நிலையை அறிந்த யசோதாம்மாசிறு சிறு வேலைகளைச் செய்து குடும்பத்தை நடத்தி வந்தார்.

இந்த நிலையிலும் தனது மூத்த மகன் நந்த குமாரை கல்லூரியில் படிக்க வைத்து வருகிறார். ஆனாலும் அவரால்தொடர்ந்து செலவழிக்க முடியவில்லை. நந்தகுமார் தவிர மேலும் இரண்டு மகன்களும் அவருக்கு உள்ளனர்.

தனது குடும்பத்துக்கு உதவி கேட்டு பலரையும் அணுகிய யசோதாம்மாவுக்கு ஒரு உதவியும் கிடைக்கவில்லை. இந்தநிலையில், நடிகர் ரஜினியை சந்திக்குமாறு சிலர் யசோதாம்மாவுக்கு யோசனை கூறினர்.

கடைசி முயற்சியாக அதையும் செய்து பார்க்க எண்ணிய யசோதா, மாண்டியாவிலிருந்து நடந்தே சென்னைவந்தார்.

யசோதாம்மா குறித்து பத்திரிக்கைச் செய்திகள் மூலம் அறிந்த ரஜினிகாந்த், சென்னை வந்த யசோதாம்மாவை தனதுஇல்லத்திற்கு வரவழைத்தார். அவருக்கு ஆறுதல் கூறிய அவர், ரூ. 20,000 பணம் கொடுத்தார்.

பின்னர், நந்தகுமாரின் கல்விச் செலவுகளை தானே ஏற்றுக் கொள்வதாகவும் கூறினார். அதன் பிறகு ஊருக்குபஸ்சிலேயே திரும்பிச் செல்லுமாறும் அவரிடம் ரஜினி கேட்டுக் கொண்டார்.

கண்களில் நீர் வழிய ரஜினிக்கு நன்றி சொல்லிய யசோதாம்மா அவரது ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil