»   »  2.ஓ டப்பிங் அசத்தல்... வேகத்தில் முடித்துக் கொடுத்த ரஜினிகாந்த்!

2.ஓ டப்பிங் அசத்தல்... வேகத்தில் முடித்துக் கொடுத்த ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

இந்தியாவிலேயே அதிக பொருட்செலவில் உருவாகும் படமான, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 2.ஓவின் இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

அடுத்த ஆண்டு ஜனவரி 25-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்தப் படம் 3 டி மற்றும் ஐமேக்ஸ் வர்ஷன்களில் வெளிவருகிறது.

Rajini in 2.O dubbing

அதற்கான தொழில் நுட்பப் பணிகள், இதுவரை எந்த இந்திய, ஹாலிவுட் படத்துக்கும் இல்லாத அளவுக்கு 2.ஓவுக்கு செய்யப்படுகிறது. இதனால் படத்தின் பட்ஜெட் இன்னும் அதிகரித்துள்ளது.

தனது காட்சிகள் அனைத்தையும் நடித்துக் கொடுத்துவிட்ட ரஜினி, படத்தின் டப்பிங்கையும் முடித்துக் கொடுத்துவிட்டாராம். எந்தப் படத்துக்குமே டப்பிங்குக்கு ரஜினிகாந்த் அதிக நேரம் எடுத்துக் கொண்டதில்லை. அதே போல 2.ஓவுக்கும் அசத்தல் வேகத்தில் டப்பிங்கை முடித்துக் கொடுத்துவிட்டாராம் சூப்பர் ஸ்டார்.

அடுத்து விஎஃப்எக்ஸ் பணிகள் சர்வதேச நிபுணர்கள், இந்திய வல்லுநர்களின் கூட்டுப் பணியாக நடக்கவிருக்கிறது. இதற்காகவே பட வெளியீட்டை தீபாவளியிலிருந்து ஜனவரி 2018-க்கு தள்ளிப் போட்டுள்ளார் ஷங்கர்.

English summary
Superstar Rajinikanth has completed his dubbing for 2.O.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil