»   »  கும்பகோணத்தில் லதா ரஜினிகாந்த்கும்பகோணத்தில் தீ விபத்தில் பலியான பள்ளிக் குழந்தைகளின் பெற்றோருக்கு நடிகர் ரஜினியின்மனைவி லதா இன்று நேரில் ஆறுதல் கூறினார்.இந்தத் தீ விபத்தில் கும்பகோணம் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் இன்பராஜின் இரு குழந்தைகளும்பலியாகியுள்ளன. ஆனால், இதுவரை ரஜினியிடம் இருந்து போனில் கூட ஆறுதல் செய்திவரவில்லை என ரஜினி மன்றத்தினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.மேலும், ரஜினி தனக்கு ஆறுதல் சொல்லாததை சுட்டிக் காட்டி இன்பராஜும் அதிருப்தியுடன்ஜூனியர் விகடனுக்கு பேட்டியளித்திருந்தார்.இந் நிலையில் ஆறுதல் சொல்ல வந்த மன்றத் தலைவர் சத்யநாராணாவை பிலுபிலுவென பிடித்துக்கொண்ட ரசிகர்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க பதில் சொல்லாமல் திரும்பிச் சென்றார்.கொரியாவில் இருக்கும் கமல், ரூ. 12 லட்சம் நிவாரண உதவி வழங்கியதோடு, அனுதாபச்செய்தியும் அனுப்பினார். ஆனால், திரைப்படத் துறையினர் கும்பகோணம் வந்தபோது கூட ரஜினிவரவில்லை. இதையும் சுட்டிக் காட்டி பத்திரிக்கைகள் எழுதின.இந் நிலையில் லதா ரஜினிகாந்த் இன்று தஞ்சை வந்தார். அவரை ரசிகர் மன்றத்தினர் பூச்செண்டுகள்கொடுத்து வரவேற்றனர். பின்னர் தஞ்சை மருத்துவமனைக்குச் சென்ற லதா, அங்கு சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் கூறினார்.இதையடுத்து சம்பவம் நடந்த பள்ளிக்குச் சென்று அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்திய பின், குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.இன்று அவரது தலைமையில் மகாமகக் குளத்தில் இருந்து மெளன ஊர்லமும் நடக்கிறது. இதில்பங்கேற்க சென்னையில் இருந்து 60 ஆசிரம குழந்தைகளையும் கும்பகோணம் அழைத்துவந்துள்ளார் லதா.

கும்பகோணத்தில் லதா ரஜினிகாந்த்கும்பகோணத்தில் தீ விபத்தில் பலியான பள்ளிக் குழந்தைகளின் பெற்றோருக்கு நடிகர் ரஜினியின்மனைவி லதா இன்று நேரில் ஆறுதல் கூறினார்.இந்தத் தீ விபத்தில் கும்பகோணம் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் இன்பராஜின் இரு குழந்தைகளும்பலியாகியுள்ளன. ஆனால், இதுவரை ரஜினியிடம் இருந்து போனில் கூட ஆறுதல் செய்திவரவில்லை என ரஜினி மன்றத்தினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.மேலும், ரஜினி தனக்கு ஆறுதல் சொல்லாததை சுட்டிக் காட்டி இன்பராஜும் அதிருப்தியுடன்ஜூனியர் விகடனுக்கு பேட்டியளித்திருந்தார்.இந் நிலையில் ஆறுதல் சொல்ல வந்த மன்றத் தலைவர் சத்யநாராணாவை பிலுபிலுவென பிடித்துக்கொண்ட ரசிகர்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க பதில் சொல்லாமல் திரும்பிச் சென்றார்.கொரியாவில் இருக்கும் கமல், ரூ. 12 லட்சம் நிவாரண உதவி வழங்கியதோடு, அனுதாபச்செய்தியும் அனுப்பினார். ஆனால், திரைப்படத் துறையினர் கும்பகோணம் வந்தபோது கூட ரஜினிவரவில்லை. இதையும் சுட்டிக் காட்டி பத்திரிக்கைகள் எழுதின.இந் நிலையில் லதா ரஜினிகாந்த் இன்று தஞ்சை வந்தார். அவரை ரசிகர் மன்றத்தினர் பூச்செண்டுகள்கொடுத்து வரவேற்றனர். பின்னர் தஞ்சை மருத்துவமனைக்குச் சென்ற லதா, அங்கு சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் கூறினார்.இதையடுத்து சம்பவம் நடந்த பள்ளிக்குச் சென்று அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்திய பின், குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.இன்று அவரது தலைமையில் மகாமகக் குளத்தில் இருந்து மெளன ஊர்லமும் நடக்கிறது. இதில்பங்கேற்க சென்னையில் இருந்து 60 ஆசிரம குழந்தைகளையும் கும்பகோணம் அழைத்துவந்துள்ளார் லதா.

Posted By:
Subscribe to Oneindia Tamil

கும்பகோணத்தில் தீ விபத்தில் பலியான பள்ளிக் குழந்தைகளின் பெற்றோருக்கு நடிகர் ரஜினியின்மனைவி லதா இன்று நேரில் ஆறுதல் கூறினார்.

இந்தத் தீ விபத்தில் கும்பகோணம் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் இன்பராஜின் இரு குழந்தைகளும்பலியாகியுள்ளன. ஆனால், இதுவரை ரஜினியிடம் இருந்து போனில் கூட ஆறுதல் செய்திவரவில்லை என ரஜினி மன்றத்தினர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

மேலும், ரஜினி தனக்கு ஆறுதல் சொல்லாததை சுட்டிக் காட்டி இன்பராஜும் அதிருப்தியுடன்ஜூனியர் விகடனுக்கு பேட்டியளித்திருந்தார்.

இந் நிலையில் ஆறுதல் சொல்ல வந்த மன்றத் தலைவர் சத்யநாராணாவை பிலுபிலுவென பிடித்துக்கொண்ட ரசிகர்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க பதில் சொல்லாமல் திரும்பிச் சென்றார்.

கொரியாவில் இருக்கும் கமல், ரூ. 12 லட்சம் நிவாரண உதவி வழங்கியதோடு, அனுதாபச்செய்தியும் அனுப்பினார். ஆனால், திரைப்படத் துறையினர் கும்பகோணம் வந்தபோது கூட ரஜினிவரவில்லை. இதையும் சுட்டிக் காட்டி பத்திரிக்கைகள் எழுதின.

இந் நிலையில் லதா ரஜினிகாந்த் இன்று தஞ்சை வந்தார். அவரை ரசிகர் மன்றத்தினர் பூச்செண்டுகள்கொடுத்து வரவேற்றனர். பின்னர் தஞ்சை மருத்துவமனைக்குச் சென்ற லதா, அங்கு சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைப் பார்த்து ஆறுதல் கூறினார்.

இதையடுத்து சம்பவம் நடந்த பள்ளிக்குச் சென்று அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்திய பின், குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

இன்று அவரது தலைமையில் மகாமகக் குளத்தில் இருந்து மெளன ஊர்லமும் நடக்கிறது. இதில்பங்கேற்க சென்னையில் இருந்து 60 ஆசிரம குழந்தைகளையும் கும்பகோணம் அழைத்துவந்துள்ளார் லதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil