»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடல் கொந்தளிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ரூ.21 லட்சம் நிதியை முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகர் ரஜினிகாந்த்வழங்குகிறார்.

சுனாமி அலைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விஜயகாந்த் ரூ.10 லட்சம், அஜீத் ரூ.10 லட்சம், விஜய் ரூ.5 லட்சம், சூர்யா ரூ.2லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந் நிலையில் ரஜினிகாந்த் ரூ.21 லட்சம் வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

உலகில் பாவிகள் அதிகரித்தால் பாதிக்கப்படுபவர்கள் அப்பாவிகளும் ஏழை மக்களும் தான். நம் அறிவுக்கு எட்டாத ஆண்டவனின் குரூரசெயல். அப்பாவி மக்களுக்கு நடந்த கோரத்தை நினைத்தால் நெஞ்சு துடிக்கிறது.

பலியானவர்களின் ஆத்மா சாந்தியடையவும், மீண்டும் இத்தகைய மிருத்யு தாண்டவம் நடக்கக்கூடாது என்றும் கடவுளைப்பிரார்த்திக்கிறேன். என்னுடைய அனில் சேவையாக ரூ.21 லட்சத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதி மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்குவழங்குகிறேன் என்று கூறியுள்ளார்.

வெளியூர் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி வரும் 3ம் தேதி சென்னை திரும்புகிறார். அன்று ஜெயலலிதாவைச் சந்தித்து இந்தத் தொகையைவழங்குகிறார். இதனை மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு தெரிவித்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil