»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழகத் தேர்தலில் வெற்றி வாகை சூடப் போவது கருணாநிதியா, ஜெயலலிதாவா என்று நாடே எதிர்பார்ப்பில் மூழ்கியிருக்கும்போது, சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் சத்தமேயில்லாமல் மகாபலிபுரம் அருகே தனது குழுவினருடன் கதை விவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

படையப்பாவுக்குப் பிறகு சூப்பர் ஸ்டாரின் படம் எதுவும் வராததால், அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். கன்னட நடிகர் ராஜ்குமார்கடத்தலால் மனக் கவலையடைந்த ரஜினிகாந்த் அவர் மீட்கப்படும் வரை படம் எதிலும் நடிப்பதில்லை என்று முடிவு செய்திருந்தார். ராஜ்குமார்மீட்கப்பட்ட பல மாதங்கள் கழிந்த நிலையில் புதிய படம் தொடர்பாக ரஜினி எந்த முடிவும் எடுக்காமல் இருந்தார்.

இந்த நிலையில், தமிழக சட்டசபைக்குத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ரஜினி அலையில் ஜெயலலிதா முற்றிலுமாககரை ஒதுங்கியதால், இந்த தேர்தலிலும் ரஜினியின் பங்கு குறித்து எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ரஜினி மெளனம் சாதித்தார். தான் யார் பக்கம் என்பதுகுறித்து எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.

அரசியலில் அவர் அமைதியாக இருந்தாலும், திரையுலகில் சத்திமில்லாமல் அவர் ஒரு காரியத்தில் இறங்கியுள்ளார். தற்போது நடந்து வரும் ரஜினி படடிஸ்கஷன் மகாபலிபுரம் அருகே தீவிரமாக நடந்து வருகிறது. அனேகமாக இந்தப் படம்தான் ரஜினியின் கடைசிப் படமாக இருக்கும் என்கிறார்கள்.இந்தப் படத்துடன் சினிமாவுக்கு டாட்டா காட்ட ரஜினி திட்டமிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். பாணியில், பாக்யராஜை கலை உலக வாரிசாக அறிவித்தது போல, தற்போது முன்ணி நடிகராக இருக்கும் விஜய்யை, தனது வாரிசாக அறிவித்துவிட்டு அரசியல் உலகில் காலடி எடுத்து வைக்கப் போகிறாராம் ரஜினி.

இதற்கு முதல் கட்டமாக, தனது சினிமா உதவியாளராக இருந்து வந்த ஜெயராமனை, விஜய்யிடம் சேர்த்து விட்டு விட்டார். சில லகரங்களுடன்ஜெயராமனும், விஜய்யிடம் செட்டிலாகி விட்டார்.

சூப்பர் ஸ்டாரின் அரசியல் வருகை அதிரடியாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil