»   »  ரஜினி, கமலோடு மோதும் விஜய்!!

ரஜினி, கமலோடு மோதும் விஜய்!!

Subscribe to Oneindia Tamil
தமிழ்ப் புத்தாண்டையொட்டி ரஜினியின் சந்திரமுகி, கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் வெளியாக அதனுடன் நேரடியாகபோட்டியில் குதிக்கிறது விஜய்யின் சச்சின்.

தொடர் வெற்றிகளால் தமிழின் முன்னணி ஹீரோவாக உருவாகிவிட்டார் விஜய். அவரது கில்லி படம் சமீபத்திய தமிழ்ப் பட வசூல்சாதனைகளை எல்லாம் உடைத்தெறிந்துவிட்டது.

இந் நிலையில் தமிழ்ப் புத்தாண்டுக்கு சந்திரமுகி பயம் காரணமாக பல தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை ரிலீஸ் செய்வதை தள்ளிப்போட்டுவிட்டனர். ஷங்கர் கூட தனது அந்நியனை ரிஸீஸை ஒத்தி வைத்துவிட்டார்.

ஆனால், தீவிர ரஜினி ரசிகரான விஜய் தனது சச்சின் படத்தை களத்தில் இறக்கிவிட்டு ஒரு கை பார்க்க முடிவு செய்துவிட்டார். இதனால்ரஜினி, கமல் ஆகிய ஜாம்பவான்களுடன் விஜய் நேரடியாக மோதுகிறார். விஜய்யின் இந்த தைரியத்தை கோலிவுட்டில் வெகுவாகவேபுகழ்கிறார்கள்.

இதற்கிடையே சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் படங்களின் டிக்கெட்டுகள் தமிழகம் முழுவதும் அசுர வேகத்தில் விற்றுத்தீர்ந்திருக்கின்றன.

தமிழகத்தில் 175 தியேட்டர்களில் சந்திரமுகி ரிலீஸ் ஆகிறது. கர்நாடகம், ஆந்திராவில் 135 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 95தியேட்டர்களிலும் இப் படம் ரிலீஸ் ஆகிறது. இதில் ஜப்பானில் 35 இடங்கள், அமெரிக்காவில் 10 இடங்கள் அடக்கம்.

சென்னையில் சாந்தி (சந்திரமுகி தயாரிப்பாளர்களான சிவாஜி குடும்பத்தின் தியேட்டர்) அபிராமி, சாந்தம், சாந்தம், உதயம், மினி உதயம்,பிருந்தா, சூரியன், சுபம் ஆகிய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

இதில் சாந்தம் தியேட்டரில் மட்டும் 22,000 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டன. அடுத்த 10 நாட்களுக்கு 4 ஷோக்களுக்கு அங்குடிக்கெட்டே இல்லை. இததனைக்கும் ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 90 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தியேட்டரில் அட்வான்ஸ் புக்கிங்கெளன்டரைக் கூட மூடிவிட்டார்கள். ஒரு வாரம் கழித்துத் தான் திறப்பார்களாம்.

இதே நிலை தான் பிற தியேட்டர்களிலும் நிலவுகிறது.

மும்பை எக்ஸ்பிரஸ் சென்னையில் 11 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இதில் சத்யம் தியேட்டரில் முதல் ஒரு வாரத்திற்கான 18,000டிக்கெட்டுகளும் விற்கப்பட்டுவிட்டன. இங்கு ஒரு டிக்கெட்டின் விலை ரூ. 80. பெரும்பாலான டிக்கெட்டுகளை ரசிகர் மன்றத்தினரேமொத்தமாக வாங்கிவிட்டனர்.

அதே போல சச்சின் படம் 6 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்துக்கான டிக்கெட்டுகளும் அடுத்த 7 நாட்களுக்கு விற்றுவிட்டன.

சந்திரமுகியை ரிலீஸ் செய்துவிட்டு இயக்குனர் வாசு நேராக குருவாயூர் கிளம்புகிறார். குருவாயூரப்பனை தரிசித்து படத்தில் வெற்றிக்காகவேண்டப் போகிறாராம். கடந்த முறை இந்தக் கோவிலில் வாசு இருந்தபோது தான் சந்திரமுகி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்குசெல்போன் மூலம் வந்து சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.

சந்திரமுகியில் வடிவேலுவின் காமெடி மிகச் சிறப்பாக வந்துள்ளதாம். சமீபத்தில் வடிவேலுவை போனில் பிடித்த ரஜினி, உங்க காமெடிரொம்ப நல்லா வந்திருக்கு. அது தான் படத்துக்கே ஹை-லைட் என்று ரஜினி புகழ்ந்து தள்ள, பதில் சொல்ல முடியாமல் கண்கலங்கியிருக்கிறார் வைகை புயல்.

சந்திரமுகி, மும்பை எக்ஸ்பிரஸ், சச்சின் வெளியாகும் தியேட்டர்களை அலங்கரிப்பதில் அவரவர்களின் ரசிகர்கள் தீவிரமாகஇறங்கியுள்ளனர்.

இதில் ரஜினி ரசிகர்கள் ஒரு படி மேலே போய் இந்தப் படம் குறித்து ஒரு சிறப்பு மலரையே வெளியிட ஏற்பாடு செய்துவிட்டார்கள். ரசிகர்மன்றத் தலைவர் சத்யநாராயணா அதை வெளியிட வாசு அதை பெறுகிறார்.

மீனாவின் சந்திரகி சோகம்!:

சந்திரமுகி வெளியாகப் போவதை நினைத்து ரஜினியின் ரசிகர்கள் எல்லாம் சந்தோஷமாக இருக்கும் வேளையில், அவர்களது முன்னாள்"அண்ணியான" மீனா ரொம்ப சோகமாக உள்ளாராம்.

ஏனாம்? சந்திரமுகியில் தனக்கு நிச்சயம் நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்று ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஆனால் ஜோதிகாவும்,நயன்தாராவும் வாய்ப்பைத் தட்டிக் கொண்டு போய் விடவே கடுப்பாகிப் போனார் மீனா.

ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டாரின் ஆஸ்தான நாயகியாக இருந்த தன் மகளுக்கு ஏற்பட்ட இந்த கதியை நினைத்து மீனாவின் மம்மி மல்லிகாவும்மூக்கைச் சிந்தினாராம்.

ஜப்பானில் எனது செல்லக் குட்டிக்குத்தான் ரசிகர்கள் அதிகம். ரஜினி படம்னாலே எனது மகளைத்தான் அவங்க எதிர்பார்ப்பாங்க. இப்பசந்திரமுகியையும் மீனாவை எதிர்பார்த்துத்தான் பார்க்கப் போவாங்க, ஆனா அவங்க ஏமாந்து போகப் போறத நினைச்சாத்தான் எனக்குரொம்ப வருத்தமா இருக்கு என்று புலம்புகிறாராம் மீனாவின் மம்மி.


மும்பைக்கு எக்ஸ்பிரசுக்கு தொடரும் மிரட்டல்:

இதற்கிடையே பெயர் பிரச்சனையை வைத்து கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் தரப்பிலிருந்து மிரட்டல்கள்தொடர்ந்து கொண்டே உள்ளன.

படத்தை ரிலீஸ் செய்யும் தியேட்டர்களுக்கு நேரில் போய் படத்தை வெளியிட வேண்டாம் என அன்புடன் கோரிக்கை வைக்கும்சிறுத்தைகள் அப்படியே எச்சரிக்கை நோட்டீஸையும் தியேட்டர் ஓனருக்கு பரிசாக தந்துவிட்டு வருகின்றனர்.

ஆரணியில் இப் படம் வெளியாகும் தியேட்டருக்குள் அதிரடியாய் நுழைந்த விடுதலைச் சிறுத்தைகள் கொடுத்துவிட்டு வந்த நோட்டீசில்,

தமிழ்நாட்டில் தமிழ் புறக்கணிப்பா.. கமல்ஹாசனே படப் பெயரை மாற்று. தியேட்டர் நிர்வாகமே மும்பை எக்ஸ்பிரஸ் படத்தைதிரையிடாதே. மீறினால், ஜனநாயகரீதியில் தடுத்து நிறுத்துவோம் என்று கூறியுள்ளனர்.


Read more about: kamal, rajini, vijay

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil