»   »  பாஸ்கர் தி ராஸ்கல்: ரீமேக் மோகம் கடைசியில் ரஜினியையும் விட்டு வைக்கலையே

பாஸ்கர் தி ராஸ்கல்: ரீமேக் மோகம் கடைசியில் ரஜினியையும் விட்டு வைக்கலையே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மலையாளத்தில் மாபெரும் ஹிட்டடித்த பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் தமிழ் ரீமேக்கில் ரஜினி நடிப்பதை இயக்குநர் சித்திக் உறுதி செய்திருக்கிறார்.

மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் பாஸ்கர் தி ராஸ்கல். பிரபல இயக்குநர் சித்திக் இயக்கிய இப்படம் மல்லுவுட்டின் சூப்பர்ஹிட் படமாக மாறியது.

ஆளுக்கொரு குழந்தையுடன் தனியாக வாழும் மம்முட்டி, நயன்தாரா இருவரும் வாழ்வில் ஒன்றிணைவது தான் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் கதை.

பாஸ்கர் தி ராஸ்கல்

பாஸ்கர் தி ராஸ்கல்

கடந்த ஆண்டு மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா, ஜே.டி.சக்கரவர்த்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல். சித்திக் இயக்கத்தில் வெளியான இப்படம் விமர்சனம்+ வசூல் இரண்டிலும் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. 6 கோடிகளுக்கும் சற்று அதிகமான பட்ஜெட்டில் வெளியான இப்படம் 16 கோடிகள் வரை வசூல் செய்தது.

அஜீத்

அஜீத்

மலையாளத்தில் ஒரு படம் வெற்றி பெற்றால் உடனே தமிழில் அப்படத்தை ரீமேக் செய்துவிட வேண்டும் கோலிவுட்டின் எழுதப்படாத விதிகளில் ஒன்று. அதே போல இப்படம் வெற்றி பெற்றதும் இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் அஜீத் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அஜீத் இப்படத்தில் நடிக்கவில்லை என்று உறுதியாகிவிட்டது.

ரஜினி

ரஜினி

அஜீத்திற்குப் பதில் இப்படத்தில் ரஜினி நடிப்பது உறுதியாகியுள்ளது. சமீபத்தில் இயக்குநர் சித்திக் அளித்த பேட்டி ஒன்றில் "பாஸ்கர் தி ராஸ்கல் ரீமேக்கில் ரஜினி சார் நடிப்பது உறுதியாகிவிட்டது. மம்முட்டி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ரஜினி சார் ஆர்வமாக இருக்கிறார். தயாரிப்பாளர் யார் என்பதையும் முடிவு செய்து விட்டோம்.

கபாலி

கபாலி

தற்போது கபாலி, 2.0 ஆகிய படங்களில் நடித்து வரும் ரஜினி அடுத்த ஆண்டில் இப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க தேதிகளை ஒதுக்குவார்" என்று உறுதியாக தெரிவித்திருக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாபநாசம்

பாபநாசம்

கடந்த ஆண்டு கமல்ஹாசன் மோகன்லால்-மீனா நடிப்பில் வெளியான திரிஷ்யம் படத்தை தமிழில் ரீமேக் செய்து நடித்திருந்தார். மலையாள திரிஷ்யம் போலவே தமிழ் பாபநாசமும் வெற்றிக் கனியைப் பறித்தது.

பிரண்ட்ஸ்

பிரண்ட்ஸ்

பிரண்ட்ஸ், காவலன் ஆகிய படங்களில் விஜய், எங்கள் அண்ணா படத்தில் விஜயகாந்த் ஆகியோரை இயக்கி தமிழிலும் சித்திக் ஏற்கனவே ஹிட்டடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Rajinikanth to act in Bhaskar the Rascal Tamil Remake.The Official Announcement of this Film Expected Soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil