»   »  கொஞ்சம் நடிச்சுத் தாங்க ரஜினி சார்...காத்திருக்கும் தேர்தல் ஆணையம்

கொஞ்சம் நடிச்சுத் தாங்க ரஜினி சார்...காத்திருக்கும் தேர்தல் ஆணையம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் தொடர்பான குறும்படங்களில் ரஜினி நடித்துக் கொடுக்க வேண்டும், என்று மீண்டும் தேர்தல் ஆணையம் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கபட்டு விட்டன. வருகின்ற மே 16 ம் தேதி நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் விறுவிறுப்பாக மேற்கொண்டு வருகிறது.

Rajini Act in Election Awareness Film

மேலும் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வுகளை மக்கள் மனதில் ஏற்படுத்தும் வகையில், குறும்படங்களையும் தேர்தல் ஆணையம் தயாரித்து வருகிறது.

ஒரு குறும்படம் தயாரிக்க ரூ 50 வரை தேர்தல் ஆணையம் செலவழிக்கிறது. எனினும் இதில் நடிக்கும் நடிக, நடிகையருக்கு சம்பளம் எதுவும் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படாது.

இந்நிலையில் இந்த வருடத் தேர்தல் தொடர்பான குறும்படங்களில் நடிக்க ரஜினி, கமல், சூர்யா, நயன்தாரா ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது.

இதில் நடிகர் சூர்யா ஏற்கனவே நடித்துக் கொடுத்து விட்டார். மேலும் நயன்தாராவும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.அடுத்ததாக ரஜினி, கமல் ஆகியோரை நடிக்க வைக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ரஜினிக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்து அவர் தரப்பிலிருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறோம் என்று தேர்தல் தலைமை அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்திருக்கிறார்.

இந்த முறையாவது ரஜினி சம்மதம் சொல்வாரா?

English summary
Tamil Nadu Chief Electoral Officer Rajesh Lakhoni said in recent Interview " Again We Invite Rajini for Election Awareness Advertising film".

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil