»   »  ரஜினி சொல்லித்தான் இறங்கி வந்தாரா விஷால்?

ரஜினி சொல்லித்தான் இறங்கி வந்தாரா விஷால்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அப்படித்தான் ஒரு பேச்சு அடிபடுகிறது. எல்லாம் இந்த ஃபெஃப்சி விஷயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில்தான்.

பில்லா பாண்டி படத்தின் மதுரை படப்பிடிப்பில் டெக்னிஷியன்கள் யூனியன் பேக்கப் சொல்லி தயாரிப்பாளர்கள் ஃபெஃப்சி பிரச்னைக்கான இந்த சீஸனைத் தொடங்கி வைத்தது. எப்போதுமே வெடிக்கும். ஆனால் அது நீறு பூத்த நெருப்பாக மேலாக அமுங்கிவிடும். ஆனால் உள்ளே இருந்த அனல் வெளியே வரத் தொடங்கியது. இந்த நிலை நீடிக்க கூடாது என்று ஃபெஃப்சிக்கே முழுவதுமாக தடை போட்டார் விஷால். ஃபெஃப்சி ஸ்ட்ரைக் ஆரம்பிக்க ரஜினியின் காலா, விஜய்யின் மெர்சல் உள்ளிட்ட படங்கள் நின்றன.

Rajini advices Vishal in Fefsi issue

ஃபெஃப்சியை பயன்படுத்தவே மாட்டோம் என்று அடம் பிடித்த விஷால் ஒருவழியாக இறங்க, இப்போது நிலைமை சகஜமானது. ஸ்ட்ரைக் வாபஸ் வாங்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கிவிட்டன.

ஆனால் யார் சொல்லி விஷால் மனது மாறியது என்ற கேள்விக்கு பதில் கிடைத்திருக்கிறது. விஜய் கேட்டுக்கொள்ளத்தான் மாறினார் விஷால் என்றார்கள். இல்லையாம். ரஜினியே நேரடியாக பேசி விஷாலுக்கு சில ஆலோசனைகள் சொன்னாராம். அதில் இருக்கும் உண்மையை உணர்ந்த விஷால் அவர் சொல்படியே பேசி பிரச்னையை முடித்துவிட்டாராம்.

அரசியல், சினிமா இரண்டிலுமே ரஜினிதான் 'கைடு' போல?

English summary
Sources says that Vishal has steped back in Fefsi talks after Rajini's guidlines.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil