»   »  இளையராஜா ஆயிரம்... பங்கேற்கிறார்கள் ரஜினி, அமிதாப்?

இளையராஜா ஆயிரம்... பங்கேற்கிறார்கள் ரஜினி, அமிதாப்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

இளையராஜா ஆயிரம் என்ற பெயரில் பிப்ரவரி 27 ஆம் தேதி இளையராஜாவுக்கு நடக்கும் பாராட்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகியோர் பங்கேற்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இளையராஜா மியூசிக்மேனேஜ்மெண்ட் நிறுவனமும் விஜய் தொலைக்காட்சியும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. தென்னிந்திய திரையுலகமே இதில் பங்கேற்கிறது.

Rajini, Amitabh to attend Ilaiyarajaa Aayiram

இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமிதாப்பச்சனையும் விழாவில் கலந்துகொள்ள அழைத்துள்ளனர். ஏற்கெனவே மும்பையில் இயக்குநர் பால்கி நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்று இளையராஜாவை பாராட்டியவர் அமிதாப்.

சென்னையில் நடக்கும் பாராட்டு விழாவிலும் பங்கேற்க அமிதாப் ஒப்புதல் தெரிவித்துள்ளாராம். ரஜினியும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள்.

கமல் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். திட்டமிட்டபடி சென்னை வந்துவிட்டால் அவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.

இவர்களோடு மலையாள முன்னணி நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோரையும் அழைத்திருக்கிறார்களாம்.

தெலுங்குத் திரையுலகம் மற்றும் கன்னடத் திரையுலகத்திலிருந்தும் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர்.

திட்டமிட்டபடி இவர்கள் அனைவரும் பங்கேற்றால் இந்திய திரையுலகமே இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுத்த மாதிரி ஆகிவிடும்.

English summary
Actors Rajinikanth, Amitabh Bachchan and many others would come to Chennai on Feb 27 to attend the grand felicitation for Maestro Ilaiyaraaja.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil