»   »  கட்சி அறிவிப்பு எப்போது? நிர்வாகிகளுடன் ரஜினி நடத்திய ஆலோசனை என்ன?

கட்சி அறிவிப்பு எப்போது? நிர்வாகிகளுடன் ரஜினி நடத்திய ஆலோசனை என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil
காலா படத்திற்குப் பிறகு ரஜினி என்ன செய்யப்போகிறார் தெரியுமா?-வீடியோ

சென்னை : கட்சி அறிவிப்பு, அடுத்து செய்ய வேண்டிய பணிகள் குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினிகாந்த் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

இன்னும் ஒரு மாதத்துக்குள் ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயரை அறிவிக்கக் கூடும் என்று நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rajini to announce his party name soon

ரஜினி மக்கள் மன்றம் ஆரம்பிக்கப்பட்டு, இதுவரை ஒரு கோடிப் பேர் வரை உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்னும் சில மாவட்டங்களில் உறுப்பினர் சேர்ப்புப் பணி முழு வீச்சில் நடக்கவில்லை. எனவே அங்கெல்லாம் அதற்கான வேலைகளைச் செய்ய நேற்றைய சந்திப்பில் ரஜினி உத்தரவிட்டுள்ளார்.

வரும், பிப்ரவரி 21ல், கமல் ஹாஸன், தன் கட்சி பெயரை அறிவித்து அரசியல் பயணம் தொடங்கப் போகிறார். அரசியலில் அவருக்கு ரொம்பவே சீனியரான ரஜினி அவருக்கு முன்பாகவே கட்சியை அறிவிப்பார் என்கிறார்கள்.

கமலுக்கு முன்னதாக, வரும், 13ம் தேதி மகா சிவராத்திரி அல்லது, 15ல், மாசி அமாவாசை நாளில், கட்சிப் பெயர் குறித்த முக்கிய அறிவிப்பை ரஜினி வெளியிடக் கூடும் என்கிறார்கள்.

English summary
Sources say that Rajinikanth is going to announce his party name soon

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil