»   »  மேடையில் ஒரு ரஜினி.... ஹாலின் நடுநாயகமாக சிட்டி ரஜினி... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

மேடையில் ஒரு ரஜினி.... ஹாலின் நடுநாயகமாக சிட்டி ரஜினி... இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நேற்று நடந்த 2.0 முதல் தோற்ற வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி... ஒரே நேரத்தில் மேடையிலும் நிகழ்ச்சி நடந்த அரங்கிலும் இரு ரஜினி காட்சி தந்ததுதான்.

மேடையில் நிஜ ரஜினி வந்து நிற்க, அரங்கின் நடு நாயகமாக பெரிய நாற்காலியில் கால் மேல் கால் போட்டபடி சிட்டி ரஜினி செம ஸ்டைலாக அமர்ந்திருந்தார்.

Rajini appears with the famous Chitti at 2.0 first look launch

இது எப்படி சாத்தியம்?

எல்லாம் ஹோலோகிராம் மாயம்.

நேற்று முன்தினமே ரஜினி மும்பைக்குப் போய்விட்டார் அல்லவா... அவரை சிட்டி கெட்டப்புக்கு மாற்றி அங்கே சில காட்சிகளைப் படமாக்கினார் இயக்குநர் ஷங்கர். அதை ஹோலோகிராம் செய்து, நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த கரண் ஜோஹர் கேள்விக்கு சிட்டி ரஜினி பதிலளிப்பது போல மாற்றியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அது அமைந்தது.

நிகழ்ச்சியின் போது ரஜினிகாந்தை மேடைக்கு வருமாறு கரண் ஜோஹர் அழைத்தார்.

ரஜினி வருவதற்காக மேடையில் ஒரு கதவு திறந்தது. திறந்த வேகத்தில் மூடிக் கொனண்டது. ரஜினி வரவில்லை. "ரஜினி சார், நீங்க எவ்வளவு ஸ்பீட்னு எனக்குத் தெரியும்... ஆனால் இந்த அளவு ஸ்பீட் ஏன்.. என்ன ஆச்சு?" என அவர் கேட்டுக் கொண்டிருக்கும்போதே, சிட்டி நாற்காலியில் அமர்ந்தபடி 'ஹலோ... ஐயாம் சிட்டி.. தி ரோபோட்.... ஸ்பீட் ஒன் டெராஹெட்ஸ், மெமரி ஒன் ஜெகாபைட்ஸ்...' என கரணை அழைத்தார்.

கரண் ஆச்சர்யத்துடன், "ஓ... சிட்டி..."

சிட்டி: கண்ணா நான் எப்போ வருவேன், எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துல வருவேன்...

கரண் புரியாமல் விழிக்க...

சிட்டி: நஹி சம்ஜானா...

கரண்: நஹி

சிட்டி: மே கப் ஆவோங்கா.. கைஸே ஆவோங்கா... கோஹி நஹி ஜான்தான்ஹூ... மஹத் ஜப் ஹே ஆவூங்கா.. சஹி வக்த் மே ஆவூங்கா... ஹாஹாஹா...

கரண்: சரி... உங்களத்தான் அக்குவேறு ஆணி வேறா பிரிச்சுப் போட்டுட்டாரே வசீகரன்.. இப்ப எப்படி?

சிட்டி: ஹாஹாஹா... என்னை யாராலும் அழிக்க முடியாது!

கரண்: ஆமா.. நீங்க உங்க பாஸ் காதலியை அபேஸ் பண்ணப் பாத்தீங்களே... அந்தக் கதை என்னாச்சு?

சிட்டி: அது ஒரு சோகக் கதை கரண். அவர் என்னை நண்பனாக்கிட்டாரு. யே தில் ஹை முஷ்கில் (இதயம் உடைஞ்சிப் போச்சு).

-இப்படிப் போனது அந்த உரையாடல்.

பாலிவுட்டின் கிங் யார் என்ற கேள்விக்கு 'மிஸ்டர் அமிதாப் பச்சன்' என்று சிட்டி ரஜினி பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

பண ஒழிப்பு குறித்துக் கேட்டபோது, 'நான் இந்த வார்த்தையை என் பாஸ் உச்சரிக்கக் கேட்டிருக்கேன்' என்றார். 'ஓ.. வசீகரன்?' என்றபோது, தன் தலையில் தட்டியபடி (மொட்ட பாஸ் ஸ்டைல்) "நோ.. சிவாஜி தி பாஸ்" என்றார் சிட்டி.

இந்த கேள்வி பதிலுக்குப் பின் மேடைக்கு வந்த ரியல் ரஜினி, 'கரண்.. ஏன் சிட்டிய தேவையில்லாம கேள்வி கேட்டு டிஸ்டர்ப் பண்றீங்க?' என்றார் சிரிப்புடன். ஒரே நேரத்தில் சிட்டி ரஜினி, ரியல் ரஜினியை அரங்கில் பார்த்தது ரசிகர்களுக்கு இரட்டை இன்ப அதிர்ச்சியாக அமைந்தது!

English summary
In 2.0 first look launch event, both Chitti Robo (Rajini) and real Rajini have appeared simultaneously at the venue and surprised the guests.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil