»   »  தாரை தப்பட்டை... வரலட்சுமியைப் பாராட்டிய ரஜினி!

தாரை தப்பட்டை... வரலட்சுமியைப் பாராட்டிய ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பொங்கலுக்கு வெளியான தாரை தப்பட்டை படத்தை வைத்து பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கும் நிலையில், அந்தப் படத்திvaraல் நடித்த வரலட்சுமிக்கு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அதுவும் உச்சநட்சத்திரத்திடமிருந்து.

பாலாவின் படங்கள் குறித்த விமர்சனங்கள் எப்படியிருந்தாலும், அவற்றைப் பார்த்து தனது கருத்துக்களைத் தெரிவிக்கத் தவறுவதில்லை ரஜினி. நான் கடவுள் பார்த்த ரஜினி, தமிழ் சினிமாவே தலை நிமிர்ந்து நிற்கிறது என்று பாராட்டினார்,

Rajini appreciates Varalakshmi

சமீபத்தில் தாரை தப்பட்டை படத்தைப் பார்த்த ரஜினிகாந்த், நடிகை வரலட்சுமியை போனில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார்.

அவரது பாராட்டு வரலட்சுமியை வானத்தில் பறக்க வைத்துவிட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், "ஓ மை காட்... நான் இப்போ ஏழாவது சொர்க்கத்தில் இருக்கேன். நேற்று என்னை சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அழைத்துப் பாராட்டினார். அந்த பாராட்டு என்னை பரவசப்பட வைத்துவிட்டது. இந்தப் பாராட்டுக்கு நன்றி சார்", என்றார்.

English summary
Rajinikanth who is busy shooting for Shankar's '2.o' and Ranjith's 'Kabali' seems to have taken time off to watch director Bala's 'Tharai Thappattai' starring Sasikumar and Varalaxmi in the lead. The star actor has apparently called the young actress and appreciated her for her hard work in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil