விக்ரம் பிரபுவிற்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி...அப்படி என்ன செய்தார்?

சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனக்கு கொடுத்த சர்ப்ரைசை நினைத்து மெய்சிலிர்த்து போய் உள்ளார் நடிகர் விக்ரம் பிரபு. இந்த சந்தோஷத்தை ரசிகர்களுடன் அவர் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு சமீபத்தில் நடத்த படம் டாணாக்காரன். போலீசை மையமாகக் கொண்ட கதை இது. உண்மை சமபவத்தின் அடிப்படையில் போலீஸ் பயிற்சி மையத்தில் நடக்கும் நிகழ்வுகள், அங்கு அளிக்கப்படும் கடுமையான பயிற்சிகள் ஆகியவற்றை எடுத்துக் காட்டி உள்ள படம்.

 பாராட்டை பெற்ற டாணாக்காரன்

பாராட்டை பெற்ற டாணாக்காரன்

டைரக்டர் தமிழ் எழுதி, இயக்கி உள்ள இந்த படத்தை Potential studios நிறுவனம் தயாரித்துள்ளது. இது தமிழ், டைரக்டராக அறிமுகமாகும் முதல் படமாகும். விக்ரம் பிரபு, லால், அஞ்சலி நாயர், எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்தின் நடித்த ஒவ்வொருவரின் நடிப்பையும் மிகப் பெரிய பாராட்டை பெற்றது.

 மற்றொரு போலீஸ் கதை

மற்றொரு போலீஸ் கதை

டாணாக்காரன் படம் சமீபத்தில் நேரடியாக ஹாட் ஸ்டாரில் வெளியிடப்பட்டது. ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்டிருந்தாலும் இந்த படம் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றதுடன், பலரின் பாராட்டை பெற்றது. காவல் துறை பற்றி மிக நுக்கமான விஷயங்களை மிக அழகாகவும், அழுத்தமாகவும் கையாண்டிருந்தார். இதனை அனைவரும் பாராட்டி இருந்தனர்.

ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ்

ரஜினி கொடுத்த சர்ப்ரைஸ்

இந்நிலையில் டாணாக்காரன் படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், விக்ரம் பிரபுவை போனில் அழைத்து பாராட்டி உள்ளார். இந்த சந்தோஷமான விஷயத்தை தனது ரசிகர்கமிடம் சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் விக்ரம் பிரபு. அதில் அவர், சூப்பர் ஸ்டாரே என்னை அழைத்து, எனது நடிப்பை பாராட்டியது என்ன ஒரு அற்புதமான ஃபீலிங். நான் கனவில் நினைத்து பார்க்க முடியாத ஒன்றை அடைந்து விட்டதாக உணர்ந்தேன். இந்த அற்புதமான ஆசையை நிறைவேற்றிய டாணாக்காரன் டீமுக்கு எனது நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

வியந்து போன விக்ரம் பிரபு

வியந்து போன விக்ரம் பிரபு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் எளிமையான மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். புதியவர்களின் திறமை, கடின உழைப்பு ஆகியவற்றை பாராட்டா ரஜினி ஒரு போதும் தவறியதில்லை. வளர்ந்து வரும் பல நடிகர்களின் படங்களை பாராட்டி வரும் ரஜினி, தற்போது விக்ரம் பிரபுவையும் பாராட்டி உள்ளார்.

தலைவர் 169 க்கு ரெடியாகும் ரஜினி

தலைவர் 169 க்கு ரெடியாகும் ரஜினி

அண்ணாத்த படத்தை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கும் தலைவர் 169 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார் ரஜினி. அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X