»   »  டிசம்பரில் சென்னை திரும்புகிறார் ரஜினி... எந்திரன் மேக்கப் டெஸ்டில் பங்கேற்கிறார்!

டிசம்பரில் சென்னை திரும்புகிறார் ரஜினி... எந்திரன் மேக்கப் டெஸ்டில் பங்கேற்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

என்னதான் ரஜினியின் கபாலி பற்றிய செய்திகளும் படங்களும் வந்து கொண்டிருந்தாலும், அவர் இன்னும் போட்டோ ஷூட் கூட செய்யாத எந்திரன் 2 பற்றிய செய்திகளுக்கு தனி ஈர்ப்பு கிடைக்கிறது.

எந்திரன் 2 படம் குறித்த இன்னொரு செய்தி இதோ...

Rajini to attend Enthiran 2 make up test in Dec

கபாலி படப்பிடிப்பை அடுத்த இரு வாரங்களுக்குள் முடித்துக் கொண்டு வரும் டிசம்பரில் சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த். வந்த கையோடு அவர் கலந்து கொள்வது எந்திரன் 2 படம் குறித்த டிஸ்கஷனில்தான். அப்படியே படத்தின் மேக்கப் டெஸ்ட் மற்றும் அவரது வேடத்துக்கான வடிவமைப்பிலும் பங்கேற்கிறார்.

எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கான வேடம் எப்படி இருக்க வேண்டும் என்பதை வடிவமைக்கும் பொறுப்பை ஹாலிவுட் நிறுவனமான சீன் ஃபுட் பெற்றுள்ளது. இவர்கள்தான் ஐ படத்தில் விக்ரமின் உருவத்தை வடிவமைத்தது (அய்யோ!).

ஏற்கெனவே ரஜினியின் தோற்றம் குறித்து ஷங்கர் ஒரு வடிவமைப்பைச் செய்துள்ளாராம். அதை ரஜினியிடம் காட்டிய பிறகு, இறுதியான வடிவமைப்புக்குப் போவார்களாம்.

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். விஷுவல் எஃபெக்டை சீனிவாஸ் மோகனும், எடிட்டிங்கை இப்போது இயக்குநராக மாறியுள்ள ஆன்டனியும் கவனிக்கிறார்கள்.

English summary
According to reports, Rajinikanth will be attending the make test for Enthiran 2 in December.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil