»   »  ஊரே கபாலியை விமர்சிக்க 'நண்பேன்டா'வின் விமர்சனத்திற்காக காத்திருக்கும் ரஜினி

ஊரே கபாலியை விமர்சிக்க 'நண்பேன்டா'வின் விமர்சனத்திற்காக காத்திருக்கும் ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நண்பர் ராஜ் பகதூரின் விமர்சனத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காத்துக் கொண்டிருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. படம் சூப்பர், மொக்கை, நெருப்புடா, ஒரு முறை பார்க்கலாம், தலைவர் கலக்கிட்டாரு, தன்ஷிகா, ராதிகா ஆப்தேவின் நடிப்பு அருமை என்று படத்தை பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைதளங்களிலும் கபாலி பேச்சாகத் தான் உள்ளது.

ராஜ் பகதூர்

ராஜ் பகதூர்

ரஜினிகாந்த் கர்நாடகாவில் கண்டக்டராக இருந்தபோது அந்த பேருந்தில் டிரைவராக இருந்தவர் ராஜ் பகதூர். ரஜினி நடிப்புக் கல்லூரியில் சேர உதவியவர். இன்றும் ரஜினி பெங்களூர் சென்றால் பகதூரை பார்க்காமல் ஊர் திரும்ப மாட்டார்.

கபாலி

கபாலி

கபாலி படத்தை பார்க்க தங்கள் தியேட்டருக்கு வருமாறு தியேட்டர் உரிமையாளர்கள் ராஜ் பகதூரை அழைத்துள்ளனர். அவர் வந்து பார்த்தால் ரஜினியே வந்து படம் பார்ப்பது போன்று இருக்கும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் கருதுகிறார்கள்.

ரஜினி

ரஜினி

ரஜினி தனது ஒவ்வொரு படமும் ரிலீஸான பிறகு யார் விமர்சனத்திற்காக காத்திருக்கிறாரோ இல்லையோ நண்பர் ராஜ் பகதூரின் விமர்சனத்திற்காக காத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

காத்திருப்பு

காத்திருப்பு

ரஜினி படம் ரிலீஸானால் முதல் நாளே படத்தை பார்த்துவிடுவார் ராஜ் பகதூர். அவர் இன்று படத்தை பார்த்துவிட்டு விமர்சனம் செய்ய முடிவு செய்துள்ளார். பகதூரின் விமர்சனத்தை ரஜினி எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். ரஜினியும், பகதூரும் இன்றும் டா போட்டு பேசும் அளவுக்கு நெருக்கமானவர்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

English summary
Rajinikanth is eagerly waiting for Kabali review from his close friend Raj Bahadur from Bengaluru.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil