»   »  இந்தியாவின் மெகா சூப்பர் ஸ்டார் யார்.. "சுல்தானை" தூக்கி அடித்தார் "கபாலி"!

இந்தியாவின் மெகா சூப்பர் ஸ்டார் யார்.. "சுல்தானை" தூக்கி அடித்தார் "கபாலி"!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவின் பெரிய சூப்பர் ஸ்டார் சல்மான் கானா, ரஜினிகாந்தா என்று நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் ரஜினிக்கு தான் அமோக ஆதரவு கிடைத்துள்ளது.

சல்மான் கானின் சுல்தான் படம் ரிலீஸாகி வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருந்தது. ஓமைகாட், என்னம்மா வசூல் செய்கிறது சுல்தான் என்று பலரும் வியந்தார். அப்போது தான் கபாலி ரிலீஸானது.


Rajini beats Salman to be India's biggest superstar

கபாலியின் வசூல் சாதனையை பார்த்தவர்கள் சுல்தானை மறுந்துவிட்டார்கள். இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இந்தியாவின் பெரிய சூப்பர் ஸ்டார் சல்மான் கானா, ரஜினிகாந்தா என ரசிகர்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தியது.


அதில் கலந்து கொண்டவர்களில் 38 சதவீதம் பேர் சல்மானுக்கு ஆதரவாகவும், 62 சதவீதம் பேர் சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாகவும் வாக்களித்துள்ளனர். பாக்ஸ் ஆபீஸை ஆட்சி செய்வது பாலிவுட்டின் எந்த கான்களும் இல்லை மாறாக தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்பதை தெரிந்து பாலிவுட் ரசிகர்கள் பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


இருப்பினும் அதிர்ச்சியை மறைத்துக் கொண்டு ரஜினி சாப் இந்தி படங்களிலும் நடித்துள்ளார், வோ ஹமாரா சூப்பர் ஸ்டார் என்று அவர்களும் பெருமைபாடுகிறார்கள்.

English summary
Accoring to a poll conducted by a leading english daily, Rajinikanth beats Salman Khan to be India's biggest superstar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil