போனில் அழைத்து வாழ்த்திய ரஜினி...நெகிழ்ந்து போன விக்னேஷ் சிவன்

சென்னை : ராக்கி படத்தை பார்த்து விட்டு ரஜினிகாந்த் ஃபோனில் அழைத்து பாராட்டியதை, நெகிழ்ச்சியுடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் டைரக்டரும், தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன். ரசிகர்கள் இதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

மழை இல்லை என்றால்... 'அண்ணாத்த' இன்னும் பெரிய ஹிட் ஆகியிருக்கும் - ரஜினி வெளியிட்ட ஆடியோ!

டைரக்டர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் ராக்கி. பாரதிராஜா, மிஷ்கின், ரவீனா ரவி, ரோஹினி, ரவி வெங்கட்ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் சமீபத்தில் ரிலீசானது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

பிரபலங்கள் பாராட்டு

பிரபலங்கள் பாராட்டு

அடிதடி ஆக்ஷனுடன், சென்டிமென்ட் கலந்து சொல்லப்பட்டுள்ள இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ஒளிப்பதிவு மட்டுமல்ல, ஒலிப்பதிவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வன்முறையை கூட மிக அழகாக காட்டி உள்ளனர். இந்த படத்தை பார்த்து விட்டு பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

ரெளடி பிக்சர்ஸ் வெளியிட்ட ஃபோட்டோ

ரெளடி பிக்சர்ஸ் வெளியிட்ட ஃபோட்டோ

ராக்கி படத்தை பார்த்து விட்டு அதில் நடித்திருந்த பாரதிராஜா மற்றும் வசந்த் ரவியை நேரில் அழைத்து அவர்களின் நடிப்பை ரஜினிகாந்த் பாராட்டி இருந்தார். இந்த தகவலை ஃபோட்டோவுடன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தது ரெளடி பிக்சர்ஸ்.

போன் செய்த ரஜினி

போன் செய்த ரஜினி

இந்நிலையில் விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தலைவர் ரஜினிகாந்த்திடம் இருந்து போன் வந்தது. ராக்கி படத்தை வழங்கியதற்காக என்னையும் நயன்தாராவையும் அவர் பாராட்டினார். படத்தை பார்த்து விட்டு அவர் வாழ்த்திய வார்த்தைகள் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டே உள்ளது.

விளக்க முடியாது

விளக்க முடியாது

தலைவரின் இந்த பாராட்டு எங்களுக்கு அதிக நம்பிக்கையை தந்துள்ளது. அந்த உணர்வை வார்த்தைகளால் விளக்க முடியாது. வெல்டன் ரெளடி பிக்சர்ஸ் என குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

ரஜினி லிஸ்டில் அடுத்த டைரக்டரா

ரஜினி லிஸ்டில் அடுத்த டைரக்டரா

இதை பார்த்துவிட்டு, அப்படியானால் ரஜினியை இயக்க போகும் டைரக்டர்கள் லிஸ்டில் விக்னேஷ் சிவனும் சேர்ந்துள்ளாரா. ரஜினி மற்றவர்களின் திறமையை எப்போதும் பாராட்ட தவறியதில்லை. இதே போல் சமூகத்திற்கு தேவையான நல்ல படங்களை தொடர்ந்து தாருங்கள் என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X