»   »  மாப்ள தனுஷ், மகள்கள், பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி

மாப்ள தனுஷ், மகள்கள், பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் சென்னையில் தீபாவளி கொண்டாடினார்.

ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக தனது மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவர் தீபாவளியை கொண்டாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அவர் நேற்று அதிகாலை சென்னை திரும்பினார். தனது வீட்டில் மனைவி, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் தனுஷ் மற்றும் பேரன்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

அவர் மகள்கள் மற்றும் மருமகனுடன் கம்பி மத்தாப்பு கொளுத்தியபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. மாமனாரும், மருமகனும் பட்டு வேட்டி சட்டை உடுத்தியுள்ளனர்.

தனுஷ் அடுத்த மாத இறுதியில் சவுந்தர்யா இயக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Superstar Rajinikanth celebrated Diwali with family in Chennai on saturday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil