»   »  37 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் ரெடி... ரஜினியின் அடுத்த அறிவிப்பு என்ன?

37 மாவட்டங்களுக்கும் நிர்வாகிகள் ரெடி... ரஜினியின் அடுத்த அறிவிப்பு என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

கட்சி ஆரம்பிக்கும் முன்பே, 37 மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தி நிர்வாகிகள் தேர்வையும் பக்காவாக முடித்திருக்கிறது ரஜினி மக்கள் மன்றம். இவை அனைத்துமே ஜஸ்ட் 2 மாதங்களுக்குள் நடந்து முடிந்திருக்கிறது.

இப்போது கிட்டத்தட்ட 27 மாவட்டங்களுக்கு முழுவதுமாக நிர்வாகிகளை அறிவித்துள்ளார் ரஜினிகாந்த். அடுத்து 10 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் தேர்வு முடிந்துவிட்டாலும், இன்னும் முறைப்படி அறிவிக்கவில்லை. இந்த வார இறுதிக்குள் அதுவும் முடிந்துவிடும் என்கிறார்கள்.

Rajini completes district functionaries appointment

அடுத்து?

உறுப்பினர் சேர்க்கையை முறைப்படுத்துவதை கையிலெடுக்கிறார் ரஜினிகாந்த். இதுவரை ஆன்லைனில் ஆப் மூலம் பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் முழுமையாக ரஜினிக்குக் கிடைக்கவில்லை. காரணம் அந்த ஆப்பில் சில குறைகள் இருப்பதுதான் என்கிறார்கள். படிவங்கள் மூலம்தான் இப்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.

ஒவ்வொரு மாவட்டமும் குறைந்தது மூன்று முதல் பத்து லட்சம் பேர் வரை உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும் என்பது இலக்கு. சிலர் ஒரு லட்சம் வரைதான் சேர்த்திருக்கிறார்கள்.

புதிய மன்றங்கள் திறப்பது, உறுப்பினர் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளை ரஜினியே நேரடியாக தலையிட்டு முடுக்கிவிடப் போகிறாராம். அடுத்த இரண்டு மாதங்களில் உறுப்பினர் எண்ணிக்கையை 1 கோடிக்கு மேல் சேர்ந்திருப்பதை அறிவித்த பிறகே கட்சி அறிவிப்பு இருக்கும் என்கிறார்கள்.

English summary
Rajinikanth has completed the appointment of all district functionaries with in just 2 months.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X