»   »  ஒரே வாரத்தில் 'கபாலி' டப்பிங்கை முடித்த ரஜினி

ஒரே வாரத்தில் 'கபாலி' டப்பிங்கை முடித்த ரஜினி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தின் டப்பிங் பணிகளை ரஜினி ஒரே வாரத்தில் முடித்துக் கொடுத்ததாக படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் கபாலி.


சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். சென்னை மற்றும் மலேசியாவில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவுக்கு வந்தது.


Rajini Completes Kabali Dubbing

இதனைத் தொடர்ந்து படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது. இதில் கடந்த வாரம் டப்பிங் பணிகளைத் தொடங்கிய ரஜினி ஒரு வாரத்திற்குள் தன்னுடைய டப்பிங்கை முடித்து விட்டதாக படக்குழு கூறியுள்ளது.


தற்போது மற்ற நடிக,நடிகையரின் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் எனத் தெரிகிறது.


படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களால் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் ஆகியவற்றை, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.


தேர்தல் மற்றும் பிற காரணங்களால் ஜூலை மாதம் கபாலி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Rajini Finished Kabali Dubbing within a Week.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil