»   »  திருச்சி ரஜினி மன்ற தலைவர் மறைவு... ரஜினி இரங்கல்!

திருச்சி ரஜினி மன்ற தலைவர் மறைவு... ரஜினி இரங்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத் தலைவர் சாகுல் ஹமீது இன்று உடல் நலக் குறைவால் காலமானார்.

அவரது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

Rajini condolences to Rajini fan club trichy dist president

திருச்சி மாவட்டத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக செயல்பட்டு வந்தார் சாகுல் ஹமீது. இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலம் குன்றியிருந்தார். அண்மையில் போனில் தொடர்பு கொண்டு சாகுல் ஹமீது உடல் நிலையை விசாரித்து ஆறுதல் கூறினார் ரஜினி.

இந்த நிலையில் சாகுல் ஹமீது இன்று மரணமடைந்தார். அவரது மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Rajini condolences to Rajini fan club trichy dist president

அந்த இரங்கல் அறிக்கையில், "திருச்சி மாவட்ட ரஜினி மன்றத் தலைவராக கடந்த 35 ஆண்டுகளாக செயல்பட்ட விஐ சாகுல் ஹமீது அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். அவரது மன்றப் பணிகள் என்றும் நம் நினைவை விட்டு அகலாதவை. அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும், மன்ற நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொண்டு, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

Rajini condolences to Rajini fan club trichy dist president
English summary
Rajinikanth has conveyed his condolence to his Trichy District fan club president Shahul Hameed.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil