»   »  2.ஓ செட்டில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டிய ரஜினிகாந்த்!

2.ஓ செட்டில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டிய ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

2.ஓ பட செட்டில் நேற்று படக்குழுவினருடன் கிறிஸ்துமஸ் நாளைக் கொண்டாடினார் ரஜினிகாந்த்.

ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் இரு வேடங்களில் நடிக்கும் எந்திரன் படத்தின் இரண்டாவது பாகப் படப்பிடிப்பு சென்னை அருகே அம்பத்தூரில் நடந்து வருகிறது.

Rajini cuts Christmas cake at 2.O sets

இந்தப் படப்பிடிப்பில் ரஜினிகாந்த், எமி ஜாக்ஸன் உள்ளிட்டோர் பங்கேற்று நடித்து வருகின்றனர். விஞ்ஞானி வசீகரனாக ரஜினி தோன்றும் காட்சிகள் இப்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

நேற்று கிறிஸ்துமஸ் தினம். அத்துடன் எமி ஜாக்ஸன் கிறித்தவர். ஆனால் அவரால் சொந்த ஊருக்குப் போக முடியவில்லை. எனவே படப்பிடிப்புத் தளத்திலேயே கேக் வெட்டிக் கொண்டாட முடிவு செய்தனர்.

மேரி கிறிஸ்துமஸ் என்று கூறி அனைவரும் கைத்தட்ட கிறிஸ்துமஸ் கேக்கை ரஜினிகாந்த் வெட்டி அனைவருக்கும் கொடுத்தார்.

English summary
Rajinikanth has cut the Christmas Cake at the sets of 2.O movie with heroine Amy Jackson.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil