»   »  ஐஸ்வர்யா ஐ.நா. சபையில் பரதம் ஆடுவதை ரஜினியும், தனுஷும் பார்க்க மாட்டார்களாம்!

ஐஸ்வர்யா ஐ.நா. சபையில் பரதம் ஆடுவதை ரஜினியும், தனுஷும் பார்க்க மாட்டார்களாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐ.நா. சபையில் ஐஸ்வர்யா பரதநாட்டியம் ஆடப் போவதை தந்தை ரஜினியும், கணவர் தனுஷும் நேரில் பார்க்கப் போவது இல்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ஒரு பரதநாட்டிய கலைஞர். ஐ.நா. சபையின் தென்னிந்திய பெண்களுக்கான நல்லெண்ண தூதுவராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டார் ஐஸ்வர்யா.

Rajini, Dhanush to skip Aishwarya's performance at UN

இந்நிலையில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் சார்பில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கவிருக்கிறது. இதில் இந்திய கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் ஐஸ்வர்யா பரத நாட்டியம் ஆடுகிறார்.

ஐ.நா. சபையில் பரதம் ஆடும் முதல் பெண் கலைஞர் ஐஸ்வர்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஐஸ்வர்யா ஐ.நா. சபையில் பரதம் ஆடுவதை ரஜினியும், தனுஷும் நேரில் பார்க்கப் போவது இல்லையாம்.

ரஜினியும், தனுஷும் தங்களின் படங்களில் பிசியாக இருப்பதால் ஐஸ்வர்யாவின் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமாட்டார்களாம்.

English summary
According to reports, Rajinikanth and Dhanush are going to skip Aishwarya's Bharatham performance in the UN on march 8.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil