»   »  'ரஜினி சார்.. ஒரே தலைவர் நீங்கதான்'! - இதுவும் அமீருதான்.. ஆனா அது வேற வாய்!

'ரஜினி சார்.. ஒரே தலைவர் நீங்கதான்'! - இதுவும் அமீருதான்.. ஆனா அது வேற வாய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

"தமிழ்நாட்டுக்கு ஒரு சூரியன், ஆந்திராவுக்கு ஒரு சூரியன்னா இருக்கு.. ஒரே சூரியன்தான். அதுமாதிரி ஒரே சூப்பர் ஸ்டார். அது ரஜினி சார்தான்!

ரஜினி சார்... நீங்க தமிழ் நாட்டோட சிஎம் ஆகணும். அதான் இங்க இருக்கிற எல்லாரோட ஆசையும். முப்பது வருஷமா உங்க ஒருத்தர் மீதுமட்டும்தான் மாறாத நம்பிக்கை வைத்துள்ளார்கள் இந்த மக்கள்.

ஆயிரம் விமர்சனங்கள் இருக்கும். நீங்கள் பார்க்காததல்ல.. நீங்க களத்துல இறங்குங்க.. நாங்க எல்லாரும் அப்படியே உங்க பின்னாடி வந்துடறோம்.

Rajini and director Ameer - A flashback

என் வாழ்நாள்ல தலைவர்னு யார் பெயரையும் உச்சரித்ததில்லை. இன்னிக்கு முதல் முறையா சொல்றேன், ஒரே தலைவர் நீங்கதான்!"

-இப்படியெல்லாம் பேசியவர் இயக்குநர் அமீர். செம கைத்தட்டல். சத்யம் தியேட்டரே அதிர்ந்தது. 2014-ல் லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழாவில், அவரது புகழுரைகளை எந்த சலனமும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார் ரஜினிகாந்த்.

இதே அமீர்தான், கபாலியின் வசூல் கணக்கை காட்ட முடியுமா? என ரஜினியை நோக்கிக் கேட்டிருக்கிறார். காரணம் அவர் பிரதமர் மோடியின் பண ஒழிப்புத் திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தது.

"ரஜினி மட்டுமா ஆதரவு தெரிவித்தார்? கமல் ஹாஸன், ஆமிர்கான், ஷாரூக்கான் உள்ளிட்ட அத்தனை நடிகர்களும், தொழிலதிபர்களும்தான் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் அமீருக்கு ரஜினி மீது ஏன் கோபம்? அவர் மோடியின் நண்பர் என்பதாலா?" என கேள்வி எழுப்பியுள்ளனர் வலைவாசிகள்!

English summary
Here is Director Ameer's speech at Lingaa audio release in 2014. The same Ameer is now criticising Rajini, only because of his friendship with PM Modi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil